Skip to main content

Posts

1. அறிமுகம்

  நண்பர்களே,   மின்னணு யுகத்தில் இது ஒருங்கிணைவின் காலம். ஒரு தனி மனிதனின் அறிவை விட ஒரு கூட்டுக் குழுமத்தின் அறிவுத் தொகுப்பு பெரியது, வலியது. ஒவ்வொரு துறையிலும் இன்று அறிவு பகிரப்படுகிறது, பரிமாறப்படுகிறது அதன் பயன் அனைவருக்கும் ஆனதாகிறது. ஒரு ஒருங்கமைக்கப்பட்ட குழுவின் அறிவு அதன் உறுப்பினருக்கு பெரும் சொத்து. நம்மை நவீனப்படுத்திக் கொள்ள நமது சட்டத் துறையிலும் இது போன்ற ஒரு பிரத்யேக அறிவுப் பரிமாற்ற ஊடகம்   தேவையாகிறது, ஆகவே அளவை என்கிற இந்த மாதம் இருமுறை சட்ட இதழ்.   இது அரசியல் சார்பற்ற வழக்கறிஞர்களுக்கான காகிதமற்ற ஒரு இலவச இணைய பத்திரிக்கை. இது ஒரு வலை பூ (blogspot)   வடிவில் இருக்கும்.   ஒரு இதழ் என்பது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெளிவரும், சுமார் 30 பக்கங்கள் கொண்டதாக இருக்கும், இது பிப் 15 2022 முதல் வெளிவரும். இதை இலவசமாக இணையம் வழி படித்துக் கொள்ளலாம்.   இதில் ஒரு பகுதி சட்டம் சமந்தமான அறிமுக கட்டுரைகள், தீர்ப்புகள் போன்றவை இடம்பெறும்.   நமக்கு வந்து சேரும் தீர்ப்புகள் அதன் எண்ணிக்கை குவியலால் கவனம் இழந்து விடுகிறது. இதைத் தவிர்க்க இதில் இடம்பெரும் தீர்ப்புகள்
Recent posts

அன்புராஜ் பேட்டி இறுதி பகுதி

  அன்புராஜ் பேட்டி - பாகம் 1 அன்புராஜ் பேட்டி - பாகம் 2 அன்புராஜ் பேட்டி இறுதி பகுதி :   உங்கள் மீதுள்ள வழக்குகள் என்னென்ன ?   தமிழகத்தில் மூன்று வன ஊழியர் கடத்தல் வழக்குகள், கர்நாடகத்தில் 2 ஆள் கடத்தல் வழக்குகள். தமிழக வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் 2011இல் விடுதலையானது, கர்நாடக வழக்குகளில் 9 வனவர்கள் கடத்தப்பட்ட குண்டல் டேம் வழக்கில் ஆயுள் பெற்றேன். என்னுடன் 12 பேர் குற்றம் சாட்டப்பட்டார்கள், இன்னொரு வழக்கு விடுதலையானது. வீரப்பன் தொடர்பாக 25 ஆண்டுகளில் சுமார் 2000 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு சுமார் 50 பேர் தண்டனைக்குள்ளானார்கள்.   காவல்துறையின் சித்ரவதை குறித்து ?   நான் மூன்று பேர்களுடன் சரண் அடைந்த உடன் நீதிமன்றத்தில் மனுச்செய்து போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கிறேன் என பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். மாதேஸ்வரன் மலையில் சிறப்பு அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள சித்திரவதை கேந்திரமான “ஒர்க் ஷாப்” என்னும் ஒரு சித்திரவதைக் கூடம் உள்ளது, சோளகர் தொட்டி நாவலில் அதை படிக்கலாம். அதற்குத்தான் அழைத்துச் செல்லப்பட்டேன். கிட்டத்தட்ட பதினைந்து நாட

3. Cross examination without filing written statement - எதிர் உரை தாக்கல் செய்யாமல் குறுக்கு விசாரணை

...T. Senthil kumar, advocate, Erode     2022 (1) CTC page 497   https://indiankanoon.org/doc/126301480/     உரிமையியல் வழக்குகளில் பிரதிவாதி எதிருரை தாக்கல் செய்யாமல் எதிர்   வழக்காடுதல்.   உரிமையியல் வழக்குகளில் பிரதிவாதி தனது எதிருரையை தாக்கல் செய்து எதிர்   வழக்காடுவதுதான் பொதுவான நடைமுறை. எதிருரை தாக்கல் செய்யாத பிரதிவாதி மீது நீதிமன்றம் ஒருதலைபட்ச உத்தரவு பிறப்பித்து வழக்கை நடத்தும். அவ்வாறு   தனது எதிருரை தாக்கல் செய்யாமல் உள்ள பிரதிவாதிக்கும் உள்ள உரிமை பற்றி 2022 (1) CTC பக்கம் 497-ல் வந்துள்ள இந்த சுவாரஸ்யமான வழக்கு தீர்ப்பு சொல்கிறது.   உரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை 8   பிரிவு 10-ல் வழக்கின் பிரதிவாதி தனது எதிருரையை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் தாக்கல் செய்யாதபோது நீதிமன்றம் அவர் மீது தீர்ப்பு பிறப்பிக்கலாம் என்றும் வழக்கு பற்றிய இன்னபிற உத்தரவுகளையும் பிறப்பிக்கலாம் என்றும் கூறுகிறது. அவ்வாறு எதிருரை தாக்கல் செய்யாத பிரதிவாதிக்கும் சில உரிமைகள் உள்ளன. எதிருரை தாக்கல் செய்யாத பிரதிவாதி, வாதியை குறுக்கு விசாரணை நீதிமன்றத்தில் செய்யலாம், மற்றும் வழக

4. Possession in Specifc Releif Act - குறித்தவகை நிவாரண சட்டத்தின் கீழ் அனுபவம்

...Mohanshankar, Advocate, Erode   MANICKAM @ THANDAPANI & ANR.   VS   VASANTHA     https://drive.google.com/file/d/1Nap09hQZN7PihDtEFQmwzY2HIk3Cx-JJ/view?usp=sharing   வழக்கு சங்கதி : வாதி பிரதிவாதியுடன்   ஒரு விற்பனை உடன்படிக்கை ஏற்படுத்துகிறார். 2400 சதுர அடிகள் விரியும் காலி மனையின் உரிமையாளர் ஆன பிரதிவாதி மீத   விற்பனை தொகை பெற்ற   உடன் தன மனையை காலியான நிலையில் வாதிக்கு அனுபவ மாற்றம் செய்து தர வேண்டும் என்பது ஒப்பந்தம்.     உரிய காலத்தில் கிரையம் செய்து கொடுக்காததால் வாதி கிரையம்   செய்து தரக்   கோரி ஒரு குறித்தவகை நிவாரண வழக்கு தாக்கல் செய்கிறார்.      பிரதிவாதி தனது எதிர் வாதுரையில் இந்த நிலத்தை விற்க நகர உச்சவரம்பு சட்டம் தடுக்கிறது என்றும் உரிய அதிகார அமைப்பு அனுமதி அளித்தால் மட்டுமே தன்னால் கிரையம் செய்து கொடுக்க இயலும் வேண்டும் இதுவரை இந்த அனுமதியை பெற   எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும்   கூறுகிறார்.      வாதி, பிரதிவாதி வேண்டும் என்றே   காலம் தாழ்த்துவதாக கூறுகிறார். பின்னர் பிரதிவாதி ஒரு கூடுதல் எதிர் வாதுரையை தாக்கல் செய்கிறார் அ

5. Granting police Custody - போலீஸ் காவலுக்கு அனுமதித்தல்

...M.V. Chandrasekaran, Advocate, Erode.   Palanisamy vs State by Inspector Police, EOW, Dindigul.   2012 ( 2) M.L.J. (Crl) P. 737   https://indiankanoon.org/doc/62875078/   வழக்கு விவரம்:   இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றொருவருடன் சேர்ந்து கடந்த 2009 ம் வருடம், ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 25,000 வட்டி தருவதாக வாக்குறுதி அளித்து ஒருவரிடம் ரூ.1,07,31,500. வசூல் செய்து மோசடி செய்தததாகக் கூறி இ.த.ச. பிரிவுகள் 406 மற்றும் 420 ன் படியும், பிரிவு 5, தமிழ்நாடு வைபீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம் (TNPID Act) ன் படியும் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு   23.9.2011 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். 4.10.2011 அன்று எதிரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்கிறார்கள். 10.10.2011 அன்று   சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றம் இரண்டு நாட்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது . அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிரி சீராய்வு மனு தாக்கல் செய்கிறார்.   உயர் நிதிமன்ற தீர்ப்பு :   குவிமுச