அன்புராஜ் பேட்டி - பாகம் 1 அன்புராஜின் பேட்டி தொடர்ச்சி இது. இது இரண்டாம் பாகம், இந்த பகுதியில் சிறையில் ஒரு நாடக நடிகர் ஆன அனுபவத்தை விவரிக்கிறார். ... Krishnan, Advocate, Erode நாடகத்தின் மீது எப்படி ஆர்வம் வந்தது ? என்னைக் கர்நாடக சிறைக்கு மாற்றியபோதே இனி கன்னடம் கற்காமல் வாழ முடியாது என எண்ணினேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்தில் கன்னடத்தை எழுதப்படிக்க கற்றுக் கொண்டேன். அப்போது எனக்கு ஆயுள் சிறை என தீர்ப்பானது. கர்நாடகத்தில் அது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள், இளமையை இங்கேயே கழிக்கவேண்டும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை, மைசூரு சிறையில் இருந்து தப்ப முடிவு செய்தேன். சிறைக்கு நான்கு மதில் சுவர்கள், இந்த நான்காவது சுவரை கடப்பதே கடினம், இதற்கான வாய்ப்புகளை நோக்கிக் கொண்டிருந்தேன், நான்காவது சுவரைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் போது ஒருவர் கடிகாரம் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார், ஆகவே அவர் சிறைவாசி அல்ல என தெரிந்துகொண்டேன். அவரை நெருங்கி விசாரித்தேன் அவர் தன்னை உலுக்கப்பா கட்டிமணி என கூறி தான் ஒரு நாடக ஆசிரியர் எனவும் சிறைக் கைதிகளை வைத்து உள்ளேயே நாடகம் போடப்போ...