Skip to main content

Posts

Showing posts from June, 2022

2. பேட்டி : அன்புராஜ்

    நீதித்துறை என்பது சாமானியர்கள், வழக்காடிகள், குற்றம் சுமத்தப் பட்டவர்கள், குற்றவாளிகள், நீதித்துறை ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோர்கள் வாழ்வில் அங்கம் வகிப்பது.   அவ்வகையில் ஒரு முன்னாள் தண்டனை கைதி அன்புராஜின் நேர்காணல் இது. இவர் வாழ்க்கை சில நம்ப இயலாத சம்பவங்கள் அடங்கியது, செறிவானது. ஆகவே இந்த நேர்காணல் சற்று நீளமானது. இது 3 பகுதிகளாக வெளிவரும். வீரப்பனுடன் இருந்த நாட்கள், குற்றம், வன அனுபவங்கள் முதல் பகுதி, சிறையிலேயே நாடக குழுவில் இணைந்து நடிகராக ஆனது, பத்திரிக்கை நடத்தியது இரண்டாவது பகுதி, நீதிமன்ற விசாரணை சிறை வாழ்க்கை மூன்றாவது பகுதி. அந்தியூர் திரு. அன்புராஜை 2018 ல் சந்தித்த போது இந்த பேட்டியின் பெரும்பகுதியை செய்துவிட்டேன், இப்போது இந்த இதழுக்காக சில கேள்விகளை சேர்த்து உள்ளேன்.   அன்புராஜ், தாமரைக்கரையில், ஜூன் 2022 அன்புராஜ் 1994 முதல் 1997 வரை வீரப்பனுடன் 3 ஆண்டுகள்   காட்டில் தலைமறைவாக அவர் குழுவில் இருந்துள்ளார். வீரப்பனுடன் இணைந்து 9 வனவர்கள் கடத்தப்பட்ட வழக்கில் 1997 முதல் 2016 வரை 19 ஆண்டுகள் 9 மாதங்கள் தொடர்ந்து 9 பகுதிகளாக தமிழக மற்றும் கர்நாடக

3. Striking down the HMOP இந்து வாழ்வுரிமை வழக்கை ரத்து செய்தல்

    .....Mohan Shankar, advocate, Erode   Indhumathi   -Vs- Prithviraj   https://indiankanoon.org/doc/89012570/   வழக்கின் சங்கதி : எதிர்மனுதாரர் குடும்ப நீதிமன்றத்தில் மனுதாரர்   மீது வாழ்வுரிமை வழக்கை தாக்கல் செய்து அது நிலுவையில் இருந்து வருகிறது. எதிர்மனுதாரர்   ஒரு அம்மன் கோவிலில் திருமணம் ஆனது என கூறி   ஒரு ரசீதை தாக்கல் செய்துள்ளார்.     மனுதாரர், எதிர்மனுதாரர்   தனது பள்ளித் தோழர் எனக் கூறுகிறார். அந்த உறவைப்   பயன்படுத்தி எதிர்மனுதாரர்   இருவருக்கும் திருமணம் ஆனது போல பொய்யாக மனு தாக்கல் செய்துள்ளார் ஆகவே கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் எதிர்மனுதாரர் மனுதாரர் தனது மனைவி என்றும் இந்த நீதிமன்றத்தில் இதை விசாரிக்க இயலாது எனவும், இந்த நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை, ஆவணம் தாக்கல் செய்தல் போன்றவை செய்ய இயலாது எனவும்   ஆகவே கீழமை   நீதிமன்றத்தில் உரிய விசாரணை நடைபபெற்று   இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை உயர்நீதிமன்றம் இதில் தலையிடக்   கூடாது எனவும் எதிர்வாதம் செய்க

4. Un registered partnership firm's rights - பதிவு செய்யாத கூட்டாண்மை நிறுவனத்தின் உரிமைகள்

    ... T. Senthulkumar, Advocate, Erode.   SRI SAGANA Vs K. PADMAVATHI   https://indiankanoon.org/doc/106786580/     (2022 (2) MWN Page 431)   வழக்கு வினா : பதிவு செய்யப்படாத கூட்டாண்மை நிறுவனங்களின் சட்ட நடவடிக்கைகளில் கூட்டாண்மை சட்டம் பிரிவு 69-ன் தாக்கம்   கூட்டாண்மை சட்டம் பிரிவு 69-ல் கூட்டாண்மை நிறுவன பதிவாளர்களிடம் பதிவு செய்யபடாத கூட்டு நிறுவனங்கள் வழக்கு தொடரும் போது உள்ள விளைவுகளை பற்றி கூறுகிறது. அப்பிரிவில் கூட்டு நிறுவனத்தின் கூட்டாளி, மேற்படி கூட்டு நிறுவனம் பதிவு செய்யப்படவில்லை எனில் அக்கூட்டு நிறுவனம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ அல்லது கூட்டாண்மை நிறுவன சட்டப் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையிலோ, மேற்படி உரிமையை நிலை நாட்ட எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது என்று சொல்கிறது. இச்சட்டப் பிரிவின் தாக்கம் குறித்து சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம்   மேற்சொன்ன SRI SAGANA Vs K. PADMAVATHI (2022 (2) MWN Page 431) என்ற வழக்கில் பிறப்பித்த தீர்ப்பில் மேற்படி இச்சட்டபிரிவின் தாக்கத்தை பற்றி தெளிவாக விளக்குகிறது.

5. ACCOUNT CLOSED and re-presenting the cheque - கணக்கு முடிக்கப்பட்டதாக திரும்பிய காசோலையை மறுதாக்கல் செய்தல்.

    ....M.V. Chandrasekaran, Advocate, Erode.   2022 (2) MWN (cr) Dcc 83   https://www.casemine.com/judgement/in/62192cdd9fca192f612d6975   Vanitha Vs. Vezhavendhan   வழக்கின் சாராம்சம் :   வழக்குக் காசோலையானது வங்கியில் வசூலுக்குத் தாக்கல் செய்யப்பட்டு "ACCOUNT CLOSED" என்ற காரணத்தால் திருப்பப்படுகிறது. காலவரையறைக்குள் அறிவிப்பு அனுப்பப்படாமல் அதே காசோலை மீண்டும் வசூலுக்குத் தாக்கல் செய்யல்பட்டு   மீண்டும் "ACCOUNT CLOSED" என்ற காரணத்தால் திருப்பப்படுகிறது.இம்முறை கால வரையறைக்குள் அறிவிப்பு அனுப்பப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.   "ACCOUNT CLOSED" என்கிற காரணத்தால் திருப்பபட்டால் மீண்டும் இரண்டாம் முறை அந்த காசோலையை வசூலுக்கு தாக்ககல் செய்ய முடியாது, முதல் முறையிலேயே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே   வழக்கை தள்ளுபடி   செய்ய வேண்டும் என்று உயிர்நீதிமன்றத்தில் எதிரி மனு தாக்கல் செய்கிறார்.   உயர் நீதிமன்ற உத்தரவு :   காசோலை "ACCOUNT CLOSED" என்ற காரணத்திற்காக திருப்பப்பட்டடால் அந்தக் கசோலையை இர

6. சாக்கிரத்தீஸ் வழக்குரை - 2

  வழக்குரை (2)   சாக்கிரத்தீஸ்      பிளேட்டோ சாக்கிரத்தீசின் வழக்குரை: 2 (பிளேட்டோவின் பதிவு) சாக்கிரத்தீஸ்: இதோ பார் , மெலிட்டஸ் , இதை எனக்குச் சொல்லு: எங்கள் இளைஞர்களை இயன்றவரை நல்வழிப்படுத்த வேண்டியது மிகமுக்கியம் என்று நீ கருதுகிறாய் , அல்லவா ? மெலிட்டஸ்: ஆம். மெத்த நல்லது. அப்படி என்றால் , இளைஞர்களை நல்வழிப்படுத்துவோர் யார் என்பதை இப்பெரியோர்களிடம் எடுத்துக்கூறு. அதில் உனக்கு அத்துணை அக்கறை இருந்தால் , அது யார் என்பது உனக்குத் தெரிய வேண்டுமே! அவர்களைக் கெடுப்பது நானே என்பதை நீ கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறாய். அதற்காக இப்பெரியோர்கள் முன்னிலையில் என்மீது நீ வழக்குத் தொடுத்துள்ளாய். இளைஞர்களை நல்வழிப்படுத்துவோர் யார் என்பதை , உன் வாயைத் திறந்து இப்பெரியோர்களிடம் எடுத்துக்கூறு... இதோ பார் , மெலிட்டஸ் , விடையளிக்க முடியாமல் நீ வாயடைத்து நிற்கிறாய். இது வெட்கக்கேடு என்று உனக்குப் படவில்லையா ? இந்த விடயத்தில் உனக்கு அக்கறை இல்லை என்று நான் கூறியதற்கு இதுவே போதிய சான்றாகத் தென்படவில்லையா ? இளைஞர்களை நல்வழிப்படுத்துவோர் யார் எ