Skip to main content

5. ACCOUNT CLOSED and re-presenting the cheque - கணக்கு முடிக்கப்பட்டதாக திரும்பிய காசோலையை மறுதாக்கல் செய்தல்.

  

....M.V. Chandrasekaran, Advocate, Erode.

 

2022 (2) MWN (cr) Dcc 83

 

https://www.casemine.com/judgement/in/62192cdd9fca192f612d6975

 

Vanitha Vs. Vezhavendhan

 

வழக்கின் சாராம்சம் :

 

வழக்குக் காசோலையானது வங்கியில் வசூலுக்குத் தாக்கல் செய்யப்பட்டு

"ACCOUNT CLOSED" என்ற காரணத்தால் திருப்பப்படுகிறது. காலவரையறைக்குள் அறிவிப்பு அனுப்பப்படாமல் அதே

காசோலை மீண்டும் வசூலுக்குத் தாக்கல் செய்யல்பட்டு  மீண்டும் "ACCOUNT CLOSED" என்ற காரணத்தால் திருப்பப்படுகிறது.இம்முறை கால வரையறைக்குள் அறிவிப்பு அனுப்பப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

 

"ACCOUNT CLOSED" என்கிற காரணத்தால் திருப்பபட்டால் மீண்டும் இரண்டாம் முறை அந்த காசோலையை வசூலுக்கு தாக்ககல் செய்ய முடியாது, முதல் முறையிலேயே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே  வழக்கை தள்ளுபடி  செய்ய வேண்டும் என்று உயிர்நீதிமன்றத்தில் எதிரி மனு தாக்கல் செய்கிறார்.

 

உயர் நீதிமன்ற உத்தரவு :

 

காசோலை "ACCOUNT CLOSED" என்ற காரணத்திற்காக திருப்பப்பட்டடால் அந்தக் கசோலையை இரண்டாம் முறை வசூலுக்குத் தாக்கல் செல்ல முடியாது. ஏனெனில் மூடப்பட்ட வங்கிக் கணக்கை மீண்டும் பரிவர்த்தனைக்குத் திறக்க முடியாது. இரண்டாம் முறை அந்தக் காசோலை தாக்கல் செய்யப்பட்டால் அது கால வரையரையை தக்க வைக்காது.

 

என்வே காசோலை "ACCOUNT CLOSED" என்ற கரணத்திற்காகத் திருப்பப்பட்டால் உடனே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இரண்டாவது முறை அந்தக் காசோலையை தாக்கல் செய்ய கூடாது என்று கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

....M.V. Chandrasekaran, Advocate, Erode

Comments