Skip to main content

Posts

Showing posts with the label Alavai1

1. முகப்பு

நண்பர்களே, மின்னணு யுகத்தில் இது ஒருங்கிணைவின் காலம். ஒரு தனி மனிதனின் அறிவை விட ஒரு கூட்டுக் குழுமத்தின் அறிவுத் தொகுப்பு பெரியது, வலியது. ஒவ்வொரு துறையிலும் இன்று அறிவு பகிரப்படுகிறது, பரிமாறப்படுகிறது அதன் பயன் அனைவருக்கும் ஆனதாகிறது. ஒரு ஒருங்கமைக்கப்பட்ட குழுவின் அறிவு அதன் உறுப்பினருக்கு பெரும் சொத்து. நம்மை நவீனப்படுத்திக் கொள்ள நமது சட்டத் துறையிலும் இது போன்ற ஒரு பிரத்யேக அறிவுப் பரிமாற்ற ஊடகம்  தேவையாகிறது, ஆகவே அளவை என்கிற இந்த மாதம் இருமுறை சட்ட இதழ்.  இது அரசியல் சார்பற்ற வழக்கறிஞர்களுக்கான காகிதமற்ற ஒரு இலவச இணைய பத்திரிக்கை. இது ஒரு வலை பூ (blogspot)  வடிவில் இருக்கும்.  ஒரு இதழ் என்பது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெளிவரும், சுமார் 30 பக்கங்கள் கொண்டதாக இருக்கும், இது பிப் 15 2022 முதல் வெளிவரும். இதை இலவசமாக இணையம் வழி படித்துக் கொள்ளலாம்.  இதில் ஒரு பகுதி சட்டம் சமந்தமான அறிமுக கட்டுரைகள், தீர்ப்புகள் போன்றவை இடம்பெறும். அடுத்த இதழில் இருந்து சில பக்கங்கள் கலை,இலக்கியம்,அறிவியல், சமூகவியல் போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்படும்.  நமக்கு வந்து சேரும...

2. பேட்டி - செங்கோட்டையன்

1940 ஆம் ஆண்டு   குமாரசாமி, முத்தம்மாள்   தம்பதிக்கு   ஊஞ்சலூரில் பிறந்தவர் திரு. செங்கோட்டையன், மனைவியுடன் ஈரோட்டில் வாழ்ந்து வருகிறார். மகனும் மகளும் அமெரிக்காவில், இன்னொரு மகன் தாராபுரத்தில் மருத்துவர். பியூசி பொருளியல் படிப்பை திருச்சி புனித ஜோசப் கல்லூரியிலும், 1966 முதல் 68 வரை சட்டப் படிப்பை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தார். 82 வயதாகும் திரு. செங்கோட்டையன் 54 ஆண்டுகள் துறை அனுபவம் உள்ளவர் இன்றும் நீதி மன்றத்திற்கு வந்து வழக்கு நடத்துகிறார். "மொழி" என்கிற கட்டுரை நூலையும் "தெரு வாசகம்" என்கிற கவிதை நூலையும் எழுதியுள்ளார். ஒரு சொற்றொடர் சேகரிப்பாளர், வாசிப்பு ஆர்வமும் இசையார்வமும் உண்டு. அவரை அவர் அலுவலகத்தில் சந்தித்து எடுத்த நேர்காணல் இது.   .....கிருஷ்ணன், வழக்கறிஞர், ஈரோடு.     1. இந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபாவத்தின் வாயிலாக ஒரு திறன்மிக்க   வழக்கறிஞரின் குணாம்சம் என எதை நினைக்கிறீர்கள் ?   ஒரு வழக்கறிஞருக்கு தீராத சட்டப் பசி வேண்டும், எத்தனை வழக்குகளை நடத்தி உள்ளார் என்பதல்ல, எத் தரத்தில் நடத்தி உள்ளார் என்பதே முக...

3. Rejection of the Plaint - வழக்குரையை தள்ளுபடி செய்தல்

  Order VII Rule 11 of CPC   2020 (2) MWN (Civil) 73 (Mad),   Jayamary vs Joseph https://drive.google.com/file/d/1Twsq4iFaR2XzEaIeHAQ_1UQtT2ofuIaD/view?usp=sharing வழக்குரையை   தள்ளுபடி செய்தல் மனுவை பரிசீலிக்கும் போது வழக்குரையில் உள்ள சங்கதிகளை மட்டும் காண வேண்டும், அதை மீறிச் செல்லக் கூடாது, எதிர் உரையை பரிசீலிக்க கூடாது என்பது பொதுவான விதி. ஆனால் மேற்படி தீர்ப்பில் மனு விசாரணையின் போது உயிலின் மூலம் எழுந்த அனைத்து பிரச்சையையும் நீதிமன்றம் பரிசீலித்தது.   இந்த வழக்கில் வாதியும் பிரதிவாதியும் கிறித்துவர்கள். தந்தைக்கு இரண்டு மனைவிகள். வாதி முதல் மனைவியின் மகன், பிரதிவாதி   சட்டப்பூர்வ இரண்டாவது மனைவி.   இவ்வழக்கில் வாதியின் தந்தை மாசிலாமணி தனது சொத்தை ஒரு உயில் மூலம் தனது இரண்டாவது மனைவிக்கு ஆயுள் அனுபவ உரிமையையும் அதன் பின் அவரின் பிள்ளைகளுக்கு முழு உரிமையும் வழங்கி   இருந்தார்.    மாசிலாமணிக்கும்   இரண்டாவது மனைவிக்கும் ஆரோக்கியசாமி என்கிற மகன் பிறந்து பின்னர் இறந்துவிட்டார். மாசிலாமணியும் பின்னர் இறந்துவிட்டார்....

4. DISCOVERY BY INTERROGATORIES - எழுத்துப்பூர்வ கேள்விகள்

    ORDER XI RULE 1 OF CPC   2010(1) MLJ 421= 2009 (5) CTC 314 P.     Kolanda Gounder Vs State of Tamil Nadu.   (https://www.legitquest.com/case/p-kolanda-gounder-v-the-state-of-tamilnadu-represented-by-its-district-collector-salem/6ed4) .   ஒரு தரப்பினர் ஒரு சங்கதியை அறிந்து கொள்ள நீதிமன்றத்தில் எழுத்து மூலமாக கேள்வி எழுப்பி எதிர் தரப்பிடம் அதற்கான பதிலை பெறலாம். இந்த தீர்ப்பில் வழக்கை விரைந்து முடிக்க Order 11 Rule 1 CPC படி கேள்வி எழுப்பி வழக்கின் முக்கிய தகவல்களை பெறலாம் என கூறப் பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த முயற்சி மறு தரப்பிடம் இருந்து தந்திரமாக சான்றுகளை பெறும் நோக்கில் இருக்கக் கூடாது.   இந்த வழக்கில் வாதி வழக்குச் சொத்தான ஒரு விவசாய நிலத்தின் குத்தகைதாரர். இவர் தனது வழக்கை சொந்த முயற்சியில் நிரூபிப்பதற்கு பதிலாக எதிர் தரப்பிடம் தனக்குத் தேவையான சான்றுகளை பெற இந்த பிரிவை பயன்படுத்துகிறார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.   V. Sampathkumar, advocate, Erode.   .....

5. Cheating by forging a document - ஆவணங்களை மோசடியாக திருத்தி ஏமாற்றுதல்

  2006(1) lw cr 316 Madras Hc Devendran vs state by Hadthampatti p.s https://indiankanoon.org/doc/1920412/ Acts : 114(g) Evidence act, 468,471,420 & 511 Ipc.   முக்கியத்துவம் :   இவ்வழக்கு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால் இந்திய சாட்சியம் சட்டத்தில் பிரிவு 114(g) என்கிற எதிர் அனுமானத்தை (adverse inference) விவாதிக்கிறது. மேலும் இதச பிரிவுகளில் சில குற்றங்களை தண்டிக்க அடிப்படையாக வேறு குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்பதும் கூறப்படுகிறது.   வழக்கின் சுருக்கம் :   இவ்வழக்கில் ஒருவர் ஏமாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் போலியாக நியமன ஆணை தயாரித்து (468 Ipc) அதை பயன்படுத்தி (471 Ipc) ஒரு அதிகாரியை நம்ப வைத்து ஏமாற்றி (420 Ipc) அரசு வேலை பெற முயன்றார் (511 Ipc) என்பதாகும். இரண்டு கீழமை நீதிமன்றங்கள் அவரை தண்டித்தாலும் சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.   தீர்ப்பின் சாராம்சம் :   இந்திய சாட்சிய சட்டத்தில் பிரிவு 114 அனுமானங்கள் குறித்து பேசுகிறது. இதில் சில எடுத்துக் காட்டுக்கள் உள்ளனன. அதிலுள்ள 114(g) எடுத்துக்காட்டுப்ப...

6. Abetting to commit suicide - தற்கொலைக்கு தூண்டுதல்

  2022(1) TNLR 101(Supreme court) Geo Varghese   Vs Date of Rajasthan https://indiankanoon.org/doc/22204678/ Acts. 107, 306 I.P.C. and 482 Cr.P.C.   சங்கதி:- 14 வயது பள்ளி மாணவன் தனது தற்கொலைக்கு   பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்தான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.   எதிரி வாக்குமூலம்:- தான் ஒழுங்காற்று குழு (Disciplinary committee)   உறுப்பினர் எனவும், தற்கொலை செய்துகொண்ட மாணவர் வகுப்பிற்கு சரியாக வராமலும் (Bunking) , அடிக்கடி தகராறு செய்தபடியாலும் முதலில் கண்டித்தும், பிறகு பள்ளி முதல்வர் மூலம் பெற்றோருக்கு தகவலும் கொடுக்கப்பட்டது.   தற்கொலை கடிதத்தில் Thanks Jeo PVT and My School   என்று பள்ளியின் பெயர் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. தற்கொலை செய்ய தூண்டினார் என்று எந்தவொரு செயலையும் முன்னிலைப்படுத்தப்படவில்லை.   உயர்நீதிமன்றம் வழக்கினை ரத்துசெய்ய (Quashing of FIR ) மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.   தீர்ப்பு:- தற்கொலை செய்துகொள்வதற்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தூண்டப்பட...

7. லலிதா என்கிற யானை

  S.G.M.Shaa @ Sheik Mohammed  https://indiankanoon.org/doc/151011628/ சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி G.R.சுவாமிநாதன் அவர்கள் யானை பராமரிப்பு மற்றும் வளர்ப்பு தொடர்பாக அளித்த தீர்ப்பு   வித்தியாசமானதாகவும், மிக முக்கியமான ஒன்றாகவும் தோன்றியது. விலங்கு உலகை பற்றியும்,   “லலிதா” என்ற யானையை ஷேக் முகமது என்பவர் 08.05.2000ல் குஞ்சு முகமது என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளார் பின்பு 2002ல் உரிமையாளர் உரிமைமாற்றம் வேண்டி விண்ணப்பித்துள்ளார். இப்போது வனவிலங்குகச் சட்டத்தின் சிக்கல்களால் அதை கிடப்பில் போட்டுவிட்டனர். சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்த விண்ணப்பத்தை நிராகரித்து உள்ளார்கள் அதிகாரிகள். நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக முகமது உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.   அரசு தரப்பிலிருந்து மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார்கள்.   யானையை காட்டிலாகா பாதுகாப்பில் விடும்படி ஆணையிடப்பட்டுள்ளது. சட்டத்தின் வரையறை படி அரசு செய்தது சரியானதே. ஆனால் அனைத்து தருணங்களிலும் சட்ட விதிகள் சரியான முடிவெடுப்பதற்கு உகந்ததா...