Skip to main content

6. Abetting to commit suicide - தற்கொலைக்கு தூண்டுதல்

 

2022(1) TNLR 101(Supreme court)

Geo Varghese  Vs Date of Rajasthan

https://indiankanoon.org/doc/22204678/


Acts. 107, 306 I.P.C. and 482 Cr.P.C.

 

சங்கதி:- 14 வயது பள்ளி மாணவன் தனது தற்கொலைக்கு  பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்தான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

 

எதிரி வாக்குமூலம்:- தான் ஒழுங்காற்று குழு (Disciplinary committee)  உறுப்பினர் எனவும், தற்கொலை செய்துகொண்ட மாணவர் வகுப்பிற்கு சரியாக வராமலும் (Bunking), அடிக்கடி தகராறு செய்தபடியாலும் முதலில் கண்டித்தும், பிறகு பள்ளி முதல்வர் மூலம் பெற்றோருக்கு தகவலும் கொடுக்கப்பட்டது.  தற்கொலை கடிதத்தில் Thanks Jeo PVT and My School  என்று பள்ளியின் பெயர் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. தற்கொலை செய்ய தூண்டினார் என்று எந்தவொரு செயலையும் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

 

உயர்நீதிமன்றம் வழக்கினை ரத்துசெய்ய (Quashing of FIR) மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

 

தீர்ப்பு:- தற்கொலை செய்துகொள்வதற்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தூண்டப்பட்டிருந்தால்தான் இ.த.ச. பிரிவு 306 பொருந்தும். வெறும் துன்புறுத்தல் செய்வதாலே தற்கொலைக்கு தூண்டுகிறார் என எடுத்துக்கொள்ள இயலாது. அவ்வாறு செய்யப்படும் ஒரு செய்கையானது தற்கொலை செய்ய தூண்டியது என்று  வெளிப்படையாக குற்றச்சாட்டு இருக்கவேண்டும். தற்கொலை செய்து கொண்ட நபர் நுண்ணிய உணர்வு நிலை (Hyper sensitive) உடையவராக இருக்கின்ற நிலையில் எதிரியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இதே செயலுக்கு அந்த நிலையுடைய வேறு ஒரு நபர் தற்கொலை செய்துகொண்டிருக்கமாட்டார் என முடிவுக்கு வந்த நீதிமன்றம், எதிரி தற்கொலைக்கு தூண்டினார் என  தண்டிக்கமுடியாது என விடுதலை செய்தது..

 

ஒரு ஆசிரியரின் கடமை மாணவருக்கு ஒழுக்கத்தை போதிப்பதுதான். வகுப்பிற்கு சரியாக வராமல் இருக்கும் அல்லது சரிவர படிக்காமல் இருக்கும் மாணவர்களை ஆசிரியர் தண்டிப்பது இயல்பானது. அவ்வாறு தண்டிக்கும் செயலானது மாணவரை தற்கொலைக்கு தூண்டினார்; என எடுத்துகொள்ளவும் இயலாது மாணவரின் ஒழுக்கமின்மை நடத்தைக்காக ஆசிரியர் கண்டிக்கும்  பட்சத்தில் குறிப்பாக நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டிய பொறுப்பில் ஆசிரியர்கள் உள்ள நிலையில் அதனை தற்கொலைக்கு தூண்டும் அல்லது  உள்நோக்கத்துடன் துணைபுரிந்தார் என கூற இயலாது.

 

எந்த சூழ்நிலைகளில் ஒரு வழக்கினை ரத்து (Quashing of FIR) செய்யலாம் என பஜன்லால் வழக்கில் ( 1992 Supp(1) scc 335) உச்சநீதிமன்றம் தெளிவுபட கூறியுள்ளது. அதன் அடிப்படையில் இந்த வழக்கினை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் உத்திரவு பிறப்பித்தது.


P.K. Chandran, Advocate,

Erode

Comments

Post a Comment