Skip to main content

Posts

Showing posts from February, 2022

2. பேட்டி - A.C. முத்துசாமி

  1946 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் அர்த்தநாரி கவுண்டன் வலசில், சின்னப்ப கவுண்டர், நல்லம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் A.C. முத்துசாமி. இளங்கலை பொருளியல் முடித்து 1971 ஆம் ஆண்டு சென்னையில் சட்டப் படிப்பு முடித்தார். ஐம்பது ஆண்டுகள் பணி அனுபவம் உடையவர்,   இவரின் மகன் கோவையில் மருத்துவர், தற்போது மனைவியுடன் ஈரோட்டில் வாழ்ந்து வருகிறார். பயண ஆர்வமும் புத்தக வாசிப்பும் உண்டு, எப்போதும் இளைஞர்களுடன் காணப்படுவார். ஆங்கிலப் புலமை மிக்கவர். ஈரோட்டில் அவரது அலுவலகத்தில் சந்தித்து செய்த நேர்காணல் இது.     .. A.s. Krishnan, advocate, Erode.       1. இந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபாவத்தின் வாயிலாக ஒரு வெற்றிகரமான   வழக்கறிஞரின் குணாம்சம் என எதை நினைக்கிறீர்கள் ? அவர் சட்ட அறிவு, அவர் வாதிடும் திறன், அவர் நேர்மை ?   முதலில் நேர்மை, அவர் அற்பணிப்புடன் இருக்க வேண்டும், பொருளியல் ரீதியாக வெற்றிகரமாக ஒரு அலுவலகத்தை நடத்த வேண்டும், அவருக்கு தொடர்புறு திறனும் வேண்டும்.     2. முதல் 3 ஆண்டுகள் உங்கள் தொழில்முறை இவ்வாறு இருந்தது, உங்கள் திறனை மேம்படுத்த என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீ

3. Original POA not required - அசல் அதிகார பத்திரம் தேவையில்லை

  ... V. Sampath kumar, Advocate, Erode.   வழக்கு வினா : பொது அதிகாரம் மூலம் ஒரு ஆவணத்தை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் போது அந்த முகவர்   அசல் அதிகார பத்திரத்தை வைத்திருக்க வேண்டுமா ?   (2022) 2 MLJ 69(SC) Amar Nath Vs Gian Chand & another.   https://indiankanoon.org/doc/46213352/   Relevant law: Sections 18A, 32, 33, 34 and 35 of the Registration Act.     சங்கதி : வழக்கு சொத்து வாதியுடையது. அவர் முதல் பிரதிவாதியிடம் அந்த சொத்தை விற்றுவிட ஒரு வாய்மொழி ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்காக வாதி 28.01.1987 அன்று இரண்டாம் பிரதிவாதிக்கு ஒரு சிறப்பு அதிகார பத்திரம் எழுதிக்கொடுத்தார் இதன் படி இரண்டாம் பிரதிவாதி சொத்தை வாதி சார்பில் விற்பனை செய்யலாம். முதல் பிரதிவாதியால் குறித்த காலத்தில் உரிய தொகையை ஏற்பாடு செய்ய இயலவில்லை. அதிகார பத்திரத்தை பயன்படுத்தி 28.04.1987 அன்று இரண்டாம் பிரதிவாதியான அதிகார முகவர் வாதியின் சொத்தை முதல் பிரதிவாதிக்கு ஒரு கிரயப் பத்திரம் மூலம் விற்றுவிட்டார்.     வாதியின் வழக்கு என்னவென்றால் இரண்டாம் பிரதிவாதிக்கு தான் அளித்து இருந்த

4. Sec.164 Cr p c copies - பிரிவு 164 குவிமுச நகல்

  ... P.K. Chandran, advocate, Erode   வழக்கு:   Miss   A   vs State of   Uttar Pradesh and another   2021 (2) SCC (Cr) 204     =     2020 (10) SCC 505           https://indiankanoon.org/doc/25921364/ பிரிவு: 164,173,207,208 Cr.P.C.   வழக்கின் சங்கதி: குற்ற வழக்கில் காவல்துறை விசாரணையின் போது நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட கு.வி.மு.ச பிரிவு 164-ன் கீழான வாக்குமூலத்தினை எப்போது எதிரி பெற உரிமை உண்டு?   தீர்ப்பு: ஒரு வழக்கில் காவல்துறை புலன்   விசாரணை முடிந்து   இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கானது கோப்புக்கு எடுக்கப்பட்டு, எதிரி நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு பிரிவு 207, 208-ன் படி   சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் கு.வி.மு.ச பிரிவு 164 -ன் கீழான வாக்குமூலம் ஆகியவற்றை பெற எதிரிக்கு உரிமை உண்டு. அதற்கு முன்பு   164 -ன் கீழான வாக்குமூலத்தினை பெற எதிரிக்கு உரிமை கிடையாது.

5. Concurrent and consecutive sentence - ஒன்றன்பின் ஒன்றான தண்டனையும் ஏக கால தண்டனையும்

.... P.K. Chandran, advocate, Erode   வழக்கு:   Sunil Kumar @ Sudhir Kumar vs state of Uttar Pradesh         2021 (2) SCC (Cr) 659     =     2021 (5) SCC 560          https://indiankanoon.org/doc/115164075/ பிரிவு: Sec 31 (1), 220 (1), 433 and 433(A)   of   Cr.P.C.       வழக்கின் சங்கதி: ஒரே வழக்கில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்ட எதிரிக்கு தண்டனை அளித்த விசாரணை நீதிமன்றம், மேற்படி தண்டனைகள் ஒன்றன்பின் ஒன்றாக   அல்லது ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று   குறிப்பிடப்படவில்லை. மேல்முறையீட்டிலும்     உயர்நீதிமன்றம் அதனை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. எதிரி வாதம்: தண்டனையானது ஒன்றன்பின் ஒன்றாக அல்லது ஏக காலத்தில்   என குறிப்பிடாத நிலையில் ஏக காலத்தில்   என்றுதான்   கருத முடியும் என்பது.     தீர்ப்பு:   Muthu Ramalingam 2016 (8) SCC 313 என்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் படி ஒரு   வழக்கில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனைகள் அளிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில், அந்த தீர்ப்பில்     ஒன்றன்பின் ஒன்றாக அல்லது ஏக காலத்தில் என்று க

6. Putting his own signature differently - தன்னுடைய கையொப்பத்தை தானே மாற்றி இடுதல்.

  ....A.S. Krishnan, advocate, Erode.   சட்டப் பிரிவுகள் : பிரிவு 138 மாற்றுமுறை ஆவண சட்டம், பிரிவு 8 இந்திய சாட்சிய சட்டம்,   2018 (1) MWN Cr DCC 77   Manimehalai vs Bamumathi   https://indiankanoon.org/doc/189095981/   வழக்கு சங்கதி : ஒரு குற்றவியல் காசோலை வழக்கில் காசோலையானது கையொப்பம் வேறுபட்டு உள்ளது என வங்கியால் திருப்பப்பட்டது. வழக்கில் எதிரி அது தனது கையொப்பம் அல்ல என நீதிமன்றத்தில் வாதிட்டார்.     தீர்ப்பின் சாராம்சம்: பிரிவு 8 இந்திய சாட்சிய சட்டப் படி ஒருவர் குற்றமிழைத்து இருக்கும் பட்சத்தில் அவரின் பிந்தைய நடத்தை பரிசீலிக்கப் பட வேண்டும். இந்த வழக்கில் எதிரி பதில் அறிவிப்பில் இந்த நிலைபாடை எடுக்கவில்லை, இதுவரை புகார்தாரர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவில்லை, ஆகவே காசோலையில் எதிரி தனது கையொப்பத்தை தானே மாற்றி இட்டிருக்கிறார் என முடிவு செய்து கீழமை நீதிமன்ற தண்டனையை உயர் நீதிமன்றம்   உறுதி செய்தது.  

7. Defamation and right of speech - அவதூறும் பேச்சுரிமையும்.

    ...வி.செ.செந்திகுமார், வழக்கறிஞர், சென்னை.     http://164.100.79.153/judis/chennai/index.php/casestatus/viewpdf/722032   மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி ரா) மீது ஒரு தீண்டாமை வன்கொடுமை குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. கி.ரா அவர்கள் சண்டே இந்தியா என்ற இதழுக்கு அளித்த பேட்டியில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவேண்டி கதிரேசன் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுவும் நீதிமன்றத்தால் விசாரனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.   அந்த குற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி திரு. கி.ரா, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இறுதியில் கி.ரா அவர்கள் மேல் தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது அனைவருக்கும் தெரிந்திருக்கும். சில நாளிதழ்களிலும் செய்தியாக வந்தது.   ஆனால் இந்த வழக்கின் முக்கிய அம்சம் என்பது இந்த குற்ற வழக்கை ரத்து செய்ய தீர்ப்பில் கொடுக்கப்பட்ட காரணங்கள். இந்த தீர்ப்பை அளித்தவர் நீதிபதி G.R.சுவாமிநாதன் சட்ட புத்தகங்கள் மட்டுமின்றி மற்