Skip to main content

1. முகப்பு

நண்பர்களே,


மின்னணு யுகத்தில் இது ஒருங்கிணைவின் காலம். ஒரு தனி மனிதனின் அறிவை விட ஒரு கூட்டுக் குழுமத்தின் அறிவுத் தொகுப்பு பெரியது, வலியது. ஒவ்வொரு துறையிலும் இன்று அறிவு பகிரப்படுகிறது, பரிமாறப்படுகிறது அதன் பயன் அனைவருக்கும் ஆனதாகிறது. ஒரு ஒருங்கமைக்கப்பட்ட குழுவின் அறிவு அதன் உறுப்பினருக்கு பெரும் சொத்து. நம்மை நவீனப்படுத்திக் கொள்ள நமது சட்டத் துறையிலும் இது போன்ற ஒரு பிரத்யேக அறிவுப் பரிமாற்ற ஊடகம்  தேவையாகிறது, ஆகவே அளவை என்கிற இந்த மாதம் இருமுறை சட்ட இதழ். 


இது அரசியல் சார்பற்ற வழக்கறிஞர்களுக்கான காகிதமற்ற ஒரு இலவச இணைய பத்திரிக்கை. இது ஒரு வலை பூ (blogspot)  வடிவில் இருக்கும். 


ஒரு இதழ் என்பது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெளிவரும், சுமார் 30 பக்கங்கள் கொண்டதாக இருக்கும், இது பிப் 15 2022 முதல் வெளிவரும். இதை இலவசமாக இணையம் வழி படித்துக் கொள்ளலாம்.  இதில் ஒரு பகுதி சட்டம் சமந்தமான அறிமுக கட்டுரைகள், தீர்ப்புகள் போன்றவை இடம்பெறும். அடுத்த இதழில் இருந்து சில பக்கங்கள் கலை,இலக்கியம்,அறிவியல், சமூகவியல் போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்படும். 


நமக்கு வந்து சேரும் தீர்ப்புகள் அதன் எண்ணிக்கை குவியலால் கவனம் இழந்து விடுகிறது. இதைத் தவிர்க்க இதில் இடம்பெரும் தீர்ப்புகள் கவனத்துடன் தேர்வு செய்யப்படும். பின்னர் நீதிமன்றத்தில் வாதிடப்  பயன்படும் வகையில் அதன் முக்கியத்துவம் குறிப்பிட்டு விளக்கப்படும். எனவே தொழில் புரியும் வழக்கறிஞர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். 


இதில் -

1. M.V. Chandrsekaran

2. P.k. Chandran

3. V. Sampath kumar

4. R. Mohan shankar

5. A.S. Krishnan


ஆகிய ஈரோட்டு வழக்கறிஞர்கள் ஆசிரியர்களாக இருப்பார்கள்.

உங்கள் ஆதரவை தெரிவிக்கவும், மேலதிக விபரங்களுக்கும் :


A.S. Krishnan,

Advocate, Erode.

98659 16970.

alavaiadvocates@gmail.com

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Knowledge Sharing is very much essential to the receiver as well as the sender. Congrats for the initiative which consumes your precious time and thanks for the opportunity...
    Let's make learning a H A B B I T*

    ReplyDelete
  3. Great initiative, congratulations and best wishes for the team.

    ReplyDelete
  4. I am a retired official from a PSU. On the one hand I suffered very much from the management side and on another side, suffered very much due to the poor handling of my legal cases. I am eagerly awaiting your articles sir. Congrats to Krishnam sir and other team members.

    ReplyDelete
  5. ஜெயமோகன் கூறியதைப் போல முழுக்க முழுக்க சட்டம் சம்பந்தப்பட்டவைக்களுக்கான இதழாக இருந்தால் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து

    ReplyDelete
  6. நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Great Initiative Sir, Makes me to think also what I should in my domain to make such collective thought process/wisdom. As a reader, I am also eagerly waiting how a common man (who is not lawer) can understand basics of laws. Once again congrats Sir and Thanks for the for sharing the knowledge Sir.

    ReplyDelete
  8. ஜெயமோகன் கூறியதைப் போல நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. மிக மிக நல்ல செயல்பாடு. வாழ்த்துகள்

    ReplyDelete
  11. Replies
    1. நல்வாழ்த்துக்கள்
      சிறந்த முயற்சி

      Delete
  12. மூத்த வழக்கறிஞர்கள் அனுபவங்கள் பகிர்ந்து கொண்டது
    அணைவரும் படித்து விவாதிக்க வேண்டிய ஒன்று படிக்க மகிழவாகவும் உள்ளது.

    ReplyDelete
  13. Very good efforts....My suggestion will be, instead of.....// வழக்கறிஞர்களுக்கான காகிதமற்ற ஒரு இலவச இணைய பத்திரிக்கை// this may be also made useful to people raising legal doubts.

    ReplyDelete
  14. Vanakam sir, I'm very glad to this valuable efforts which you have been taken ... Thanks for your team...
    This would be more usefull for the people who are all practising as a professionals....

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment