Skip to main content

3. Original POA not required - அசல் அதிகார பத்திரம் தேவையில்லை

 

... V. Sampath kumar, Advocate, Erode.

 

வழக்கு வினா : பொது அதிகாரம் மூலம் ஒரு ஆவணத்தை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் போது அந்த முகவர்  அசல் அதிகார பத்திரத்தை வைத்திருக்க வேண்டுமா ?

 

(2022) 2 MLJ 69(SC)

Amar Nath Vs Gian Chand & another.

 

https://indiankanoon.org/doc/46213352/

 

Relevant law:

Sections 18A, 32, 33, 34 and 35 of the Registration Act. 

 

சங்கதி :

வழக்கு சொத்து வாதியுடையது. அவர் முதல் பிரதிவாதியிடம் அந்த சொத்தை விற்றுவிட ஒரு வாய்மொழி ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்காக வாதி 28.01.1987 அன்று இரண்டாம் பிரதிவாதிக்கு ஒரு சிறப்பு அதிகார பத்திரம் எழுதிக்கொடுத்தார் இதன் படி இரண்டாம் பிரதிவாதி சொத்தை வாதி சார்பில் விற்பனை செய்யலாம். முதல் பிரதிவாதியால் குறித்த காலத்தில் உரிய தொகையை ஏற்பாடு செய்ய இயலவில்லை. அதிகார பத்திரத்தை பயன்படுத்தி 28.04.1987 அன்று இரண்டாம் பிரதிவாதியான அதிகார முகவர் வாதியின் சொத்தை முதல் பிரதிவாதிக்கு ஒரு கிரயப் பத்திரம் மூலம் விற்றுவிட்டார். 

 

வாதியின் வழக்கு என்னவென்றால் இரண்டாம் பிரதிவாதிக்கு தான் அளித்து இருந்த அதிகாரத்தை  28.01.1987 அன்று ரத்து செய்துவிட்டு 02.02.1987 அன்று அவரிடம் இருந்து அசல் அதிகார பத்திரத்தை திரும்ப பெற்றுக் கொண்டார். ஆகவே 28.04.1987 அன்று இரண்டாம் பிரதிவாதி அதிகாரம் அற்றவர், அவர் அசல் அதிகார பத்திரத்தை காண்பிக்காமல் ஒரு சான்றிட்ட நகலை காட்டி கிரயம் செய்துள்ளார். இது முதல் பிரதிவாதியுடன் கூட்டு சேர்ந்து நடத்திய மோசடியாகும். ஆகவே இந்த விற்பனை செல்லத்தக்கது அல்ல என விளம்பக் கோரினார். 

 

தீர்ப்பு: இவ் வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. வாதங்களுக்கு பின்  ஒரு அதிகார முகவர் என்பவர் அதிகாரம் அளித்தவர் நிலையில் நின்று கொண்டு இருக்கிறார். அவர் பத்திரப் பதிவு சட்டம் பிரிவு 32(a) வரம்புக்குள் வருகிறார், ஆகவே கிரைய பதிவின் போது அசல் அதிகார பத்திரத்தை காண்பிக்க வேண்டியது இல்லை. மேலும் பத்திரப் பதிவு சட்டம் பிரிவு 35 என்பது ஒரு பத்திரம் பதியும் முன் ஒரு பதிவாளர் மேற்கொள்ள வேண்டிய விசாரணை பற்றி கூறுகிறது. ஆனால் இப்பிரிவின் படி ஒரு முகவர் போதிய அதிகாரம் பெற்றுள்ளாரா என ஒரு பதிவாளர் விசாரித்து அறியத் தேவையில்லை ஆகவே இந்த விற்பனை செல்லத் தக்கது தான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Comments

  1. சட்ட நுணுக்கங்கள் தேவை

    ReplyDelete

Post a Comment