Skip to main content

4. Sec.164 Cr p c copies - பிரிவு 164 குவிமுச நகல்

 

... P.K. Chandran, advocate, Erode

 

வழக்கு:  Miss  A  vs State of  Uttar Pradesh and another

 2021 (2) SCC (Cr) 204    =    2020 (10) SCC 505

         https://indiankanoon.org/doc/25921364/

பிரிவு: 164,173,207,208 Cr.P.C.

 

வழக்கின் சங்கதி: குற்ற வழக்கில் காவல்துறை விசாரணையின் போது நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட கு.வி.மு.ச பிரிவு 164-ன் கீழான வாக்குமூலத்தினை எப்போது எதிரி பெற உரிமை உண்டு?

 

தீர்ப்பு: ஒரு வழக்கில் காவல்துறை புலன்  விசாரணை முடிந்து  இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கானது கோப்புக்கு எடுக்கப்பட்டு, எதிரி நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு பிரிவு 207, 208-ன் படி  சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் கு.வி.மு.ச பிரிவு 164 -ன் கீழான வாக்குமூலம் ஆகியவற்றை பெற எதிரிக்கு உரிமை உண்டு. அதற்கு முன்பு  164 -ன் கீழான வாக்குமூலத்தினை பெற எதிரிக்கு உரிமை கிடையாது.

Comments