சென்னையில் 1999 ஆம் ஆண்டு ராஜகோபாலன், சீதா தம்பதிக்கு மகனாக பிறந்தார் விக்னேஷ் ஹரிஹரன். SSM உயர்நிலைப் பள்ளியில் மேல் நிலை கல்வி முடித்து, தற்போது தஞ்சாவூர் சாஸ்த்ரா கல்லூரியில் இறுதி ஆண்டு சட்டம் பயின்று வருகிறார். ஒரு பயணத்தில் மதுரையில் அவரை சந்தித்து செய்த நேர்காணல் இது. A S Krishnan, Advocate, Erode. 1. சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது ? அடிப்படையில் humanities and social sciences சார்ந்த ஆர்வம் பள்ளி நாட்களிலிருந்தே இருந்தது. ஆனால் வரலாறு, சமூகவியல் என்று ஒரு துறை சார்ந்து என்னை குறுக்கிக்கொள்ள விருப்பமில்லை. தவிர அப்பாடங்களுக்கான வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே இவை அனைத்தும் கலந்த ஒரு காக்டெய்ல் பாடத்தை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது என் ஆங்கில ஆசிரியைதான் சட்டம் படிக்கும் யோசனையை வழங்கினார். சிறு வயதிலிருந்தே பேச்சுப் போட்டிகளில் ஆர்வமிருந்ததால் நானும் ஒப்புக்கொண்டேன். 2. கல்லூரி பாட திட்டத்துக்கும் நடைமுறை வழக்கறிஞர் தொழிலுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்கிற கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உண்மைதான். சட்டமும் நடைமுறையும்...