2015 (5) CTC 360
k. Ranganathan vs The Commissioner,
Erode city corporation
https://www.google.com/amp/s/www.casemine.com/judgement/in/5ac5e38e4a93261a1a768997/amp
... Sampath, advocate, Erode.
சட்ட பிரிவுகள் : இந்து தத்தெடுப்பு மற்றும்
ஜீவனாம்ச சட்டம் 1956 பிரிவுகள் 12,16.
வழக்குரை வினா : தத்து எடுக்கப்பட்ட குழந்தையின்
முதலெழுத்தை மாற்றக் கோரி வழக்கு தொடுக்க முடியுமா ?
வழக்கு சங்கதி : தத்து எடுத்த பெற்றோர் தன்
தத்து குழந்தையின் முதல் எழுத்தை மாற்றக் கோரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிறப்பு
இறப்பு பதிவு சட்டத்தின் கீழ் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதை நடுவர் உகந்த உரிமையியல்
நீதிமன்றத்தை அணுக சொல்லி திருப்பிவிட்டார். இதை எதிர்த்து பெற்றோர் உயர் நீதிமன்றம்
சென்றனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு : இந்துக்களை பொறுத்த
வரை அது உயிரியல் பெற்றோரோ அல்லது தத்து பெற்றோரோ இரண்டும் இந்து தத்தெடுப்பு மற்றும்
ஜீவனாம்ச சட்டம் 1956 இன் கீழ் தான் வருகிறது. இவ்வழக்கில் தத்து பத்திரம் பதிவு செய்யப்பட்டு
விட்டது. இந்து தத்தெடுப்பு மற்றும் ஜீவனாம்ச சட்டம் 1956 பிரிவு 12 படி தத்து குழந்தை
அந்த பெற்றோருக்கு பிறந்த குழந்தை போல பாவிக்கப்பட வேண்டும். இந்த சட்டத்தின் பிரிவு
16 ஒரு தத்தெடுப்பு முன் அனுமானத்தை வழங்குகிறது.
குழந்தையின் முதல் எழுத்தை மாற்ற பெற்றோரை
மூலைக்கும் சாலைக்கும் அலைய வைக்கக் கூடாது. பெற்றோர் அரசிதழில் பதிவு செய்வதற்காக
முதல் எழுத்து மாற்ற ஒரு பொது அறிவிப்பு கொடுத்தால் போதுமானது. பள்ளி நிர்வாகம், பாஸ்போர்ட்
அலுவலகம் இதை ஏற்றுக் கொண்டு இந்து தத்தெடுப்பு மற்றும் ஜீவனாம்ச சட்டம் 1956 பிரிவு
12 படி தங்கள் பதிவுகளை திருத்தம் செய்ய வேண்டும்.
... Sampath, advocate, Erode.
Comments
Post a Comment