Skip to main content

5. Directions to Magistrates on Remands - நீதிமன்ற காவல் உத்தரவுக்கு வழிகாட்டு நெறிகள்


...A.S. Krishnan, advocate, Erode.

 

Arnesh Kumar vs State of Bihar

2014 8 Scc 273

https://indiankanoon.org/doc/2982624/

 

சட்ட பிரிவுகள்  : 41,41 A, 41(1)(b)(ii) குவிமுச, 4 வரதட்சணை தடுப்பு சட்டம், 498 A  இ த ச

 

வழக்கின் சாராம்சம்: மனைவி தன் கணவருக்கு எதிராக ஒரு வரதட்சணை கொடுமை புகாரை காவல் நிலையத்தில் அளித்து இருந்தார். இதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருந்தது. கணவரின் முன் ஜாமீன் மனு முதலில் மாவட்ட நீதிமன்றத்திலும் பின்னர் உயர்  நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

 

உச்சநீதிமன்ற தீர்ப்பு : உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரத்தை பார்வை இட்டதில் இதுபோல ஆண்டுக்கு 1.9 லட்சம் பேர் தேசம் முழுவதும் இந்த  வழக்குகளில்  கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் 15 % க்கு கீழ் தான் தண்டிக்கப்படுகிறார்கள். இதுதான் உள்ளதிலேயே தண்டனை சதவிகிதம் குறைவான வழக்கு வகை.

 

இ த ச 498 A என்கிற துன்புறுத்தல் பிரிவு ஒரு பெண்ணை அவரின் கணவர், மாமனார் மாமியார் துன்புறுத்துவதை தடுக்க ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நடைமுறையில் இது கேடயமாக அல்ல ஆயுதமாக பயன்படுகிறது. விரக்தியுற்ற மனைவிகள் தனது கணவர், வயோதிக மாமனார் மாமியார் வெளிநாடு வாழ் நாத்தனார் மீது தேவையற்ற புகார் அளித்து அவர்களை பிணையில் விடா குற்றத்தில் சிறையில் தள்ளுகிறார்கள். எங்கள் அனுபவத்தில் கைதுகள் அதன் முக்கியத்துவம் உணராமல் ஒரு சாதாரண சடங்கு போல செய்யப்படுகிறது. நீதிமன்ற காவலும் வெகு சாதாரணமாக செய்யப்படுகிறது.

 

பொதுவாக ஒரு வழக்கில் ஒரு நீதித்துறை நடுவர் தன் முன் கைது செய்து கொண்டுவரப்படும் நபரை சிறைக் காவலுக்கு அனுப்ப உண்மையில் தேவை இருக்கிறதா என இத் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்படும் அம்சங்களை பொறுத்து திருப்தியுற வேண்டும். இல்லையெனில் அவரை விடுவிப்பது அவர் கடமை.

 

காரணமின்றி நீதிமன்றக் காவலுக்கு ஒருவரை உட்படுத்தினால் அந்த நடுவர் மீது சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றம் துறைவாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

இவ்வழக்கில் மனுதாரருக்கு முன் பிணை வழங்கப்படுகிறது.

 

...A.S. Krishnan, advocate, Erode.

Comments