... Mohan Shankar, advocate, Erode
K.Raju Vs Kuthalingam & others.
2022 (2) CTC 78
https://indiankanoon.org/doc/113369891/
சட்ட பிரிவுகள் : Order 1 Rule 10 (2) of CPC
இந்த வழக்கின் வினா என்னவென்றால் ஒரு பாகப் பிரிவினை வழக்கு
நடைபெறும் போது சம்பந்தப் பட்ட சொத்தை ஒருவர் வாங்கினால் அந்த வழக்கில் அவரை தரப்பினராக
சேர்க்க வேண்டுமா ?
வழக்கு சங்கதி : ஒருவர் தன் சகோதரர் மற்றும் கொழுந்தியாள் மீது
ஒரு பாகப் பிரிவினை வழக்கு தாக்கல் செய்தார். சகோதரர் வழக்கு நிலுவையில் உள்ள போது
தன் பாகத்தை இன்னொருவருக்கு விற்று விட்டார். அதை வாங்கியவர் தன்னையும் ஒரு தரப்பினராக
அந்த வழக்கில் சேர்க்க வேண்டும் எனக் கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி
செய்யப்பட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனு தாக்கல்
செய்கிறார். அதில் தான் ஒரு உண்மையான வாங்கிய நபர் என்றும், இந்த வழக்கு நிலுவையில்
இருப்பது தெரியாமல் இந்த சொத்தை வாங்கியதாகவும் தன்னை சேர்க்காமல் இதில் ஒரு தீர்ப்பை
வழங்க இயலாது எனவும் கூறுகிறார். 2013 (5) SCC 397 and 2015 (4) CTC 293 (DB) ஆகிய
தீர்ப்புகளை மேற்கோள் காட்டுகிறார். பாகப் பிரிவினை வழக்கை தாக்கல் செய்த வாதி இது.வழக்கை
தாமதப் படுத்தும் பொருட்டு தீய எண்ணத்துடன் தாக்கல் செய்யப் பட்ட மனு என்றும் இப்போது
முதல் நிலை தீர்ப்பில் இவரை சேர்க்க தேவை இல்லை என்றும் இருதிநிலை தீர்ப்புக்கு முன்
சேர்க்கலாம் என்றும் வாதிட்டார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு : 2020 (13) SCC 773, 2017 (7) SCC 342 ஆகிய முன் தீர்ப்புகள் பரிசீலிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சொத்தை வாங்கியவர் மூன்றாம் நபர் தான், இவர் அவசிய தரப்பினர் அல்ல. இவர்
விற்றவரிடம் இருந்துதான் உரிமை பெறுகிறார். இவரின் உரிமை இரண்டாம் பட்ச உரிமைதான்.
இந்த வழக்கின் முடிவுக்கு இந்த உரிமை கட்டுப்பட்டது அதே சமயம் இந்த விற்பனை செல்லத்
தகாதது ஆகாது. சொத்தை வாங்கியவர் இறுதிநிலை தீர்ப்புக்கு முன் தன்னை தரப்பினராக சேர்த்துக்
கொள்ளலாம் என்று கூறி இந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
...Mohan Shankar, advocate, Erode
Comments
Post a Comment