2022 (1) LW (Crl) 181
K. Muruganandam & others Vs
State
https://www.casemine.com/judgement/in/61fb8cb09fca197543c15a4d
P.K. Chandran, Advocate, Erode
சட்டப் பிரிவு : குவிமுச பிரிவு 198
வழக்கின் சாராம்சம்: இருமணம் போன்ற பிடியாணை
வேண்டிய குற்ற (non – cognizable offence) வழக்கில் பாதிக்கப்பட்டவர் தனிப் பிராதாக
கொடுக்காமல் காவல்துறையினர் விசாரனை செய்து 494 இ.த.ச.-ன் படி குற்றப்பத்திரிக்கை தாக்கல்
செய்தது- செல்லதக்கதா?
தீர்ப்பு: கு.வி.மு.ச. சட்டப்பிரிவு 198-ன்
படி பாதிக்கப்பட்டவர் தான் 494 இ.த.ச. வின் கீழான குற்றத்திற்கு நீதிமன்றத்தில் புகார் கொடுக்க வேண்டும். ஆனால்
இந்த வழக்கில் காவல் துறையினர் விசாரனை செய்து வேறு சில பிடியாணை வேண்டா குற்றத்துடன் (cognizable
offence)சேர்த்து 494 இ.த.ச. பிரிவின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்கள்.
1997 AIR SC 1 என்ற உச்ச நீதிமன்ற முன்தீர்ப்பின் படி காவல் துறையினர் பிடியாணை வேண்டா
குற்றம் சம்பந்தமான விசாரனை செய்யும் போது பிடியாணை வேண்டிய குற்றத்துக்கும் விசாரனை
செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யலாம். ஆகவே இந்தவழக்கில் காவல் துறையினர்
இ.த.ச. பிரிவு 494-ன் கீழ் குற்றப்த்திரிக்கை தாக்கல் செய்தது செல்லத்தக்கது எனக்கூறி
தண்டனையை உறுதி செய்தது.
...P.K. Chandran, Advocate, Erode
Comments
Post a Comment