Skip to main content

3. Creation of Easement right - வழியுரிமை உருவாக்கம்


.... Mohan Shankar, advocate, Erode


Nallammal and another -Vs- Sengoda Gounder and others

 

https://www.google.com/amp/s/www.livelaw.in/amp/news-updates/madras-high-court-easement-right-cannot-be-created-by-parties-197194

 

சட்டம் : இந்திய வழியுரிமை சட்டம் 1882

 

வழக்கின் சாராம்சம் :

 

வாதி பிரதிவாதி கள் மீது நிரந்தர உறுத்துக் கட்டளை கோரி வழக்கு தாக்கல் செய்தார். வாதி தன் நிலத்துக்குள் பிரதிவாதிகள் வரக் கூடாது என உத்தரவிட கோரி இருந்தார். பிரதிவாதிகள் தங்களுக்கு வாதியின் நிலம் வழியாக வண்டித் தட வழியுரிமை உள்ளது என எதிர் வழக்காடினார்கள். வாதியின் வழக்கு தோற்றதால் உயர்நீதி மன்றத்தில் வாதி மேல் முறையீடு செய்தார்.

 

சர்வே எண் 88/1 பிரதிவாதியுடையது, இது வாதியின் நிலத்திற்கு அருகில் உள்ளது. இதற்கு செல்வதற்கு வாதியின் நிலம் அமைந்துள்ள சர்வே எண் 88/3 வழியாக எந்த உரிமையும் இல்லை. ஆனால் சர்வே எண் 88/3 ல் இரண்டு செண்டுகள் நிலத்தை பிரதிவாதிகள் வேறொருவரிடம் வாங்கினார்கள். இதை அடிப்படையாக வைத்து வாதி நிலம் வழியாக தங்கள் நிலத்திற்கு செல்ல அவசிய வழியுரிமை உள்ளது என பிரதிவாதிகள் கோருகிறார்கள். இது ஒரு நூதன உத்தியாகும்.

 

உயர் நீதிமன்றத் தீர்ப்பு :

 

இந்திய வழியுரிமை சட்டம் 1882 இன் படி ஒருவர் அனுமதியின் பேரிலோ நீண்ட அனுபவத்தின் பேரிலோ இன்னொருவர் நிலத்தை பயன்படுத்தும் உரிமை ஆகும்.

இந்த வழக்கின் கிராம நிர்வாக வரைபடத்தின் படி வழித் தடம் வாதி நிலத்துடன் நின்று விடுகிறது. சொத்துரிமை ஆவணங்களிலும் இது இல்லை.  பிரதிவாதிகள் தங்களுக்குள் பாகத்தை பிரித்துக் கொண்டு ஒரு வண்டித் தடத்தை உருவாக்கி கொண்டனர். ஆவணங்களின் படி இந்த பாதை முன்பு இல்லை. வழியுரிமை என்பது வாய் மொழியாக அமைய பெறாது, இதை உருவாக்வோ அழிக்கவோ இயலாது. இதில் பிரதிவாதிகள் மறைமுகமாக ஒரு வழியை உருவாக்க முயன்று உள்ளார்கள், இது செல்லத் தக்கது அல்ல என வாதிக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.

 

....Mohan Shankar, advocate, Erode

Comments