..P.K. Chandran, advocate, Erode
V. Subramanian and another vs State
2022 (2) MWN (Cr) 299
https://indiankanoon.org/doc/149645591/
சட்ட பிரிவுகள் : இதச
147, 148, 341, 294B, 321, 307, 302. காவல் நிலை ஆணைகள் எண். 588 A
வழக்கின் சாரம்சம்: வழக்கின் சம்பவத்தின் போது புகார்தாரும்
எதிரிகளும் தாக்கிக் கொண்டார்கள் இதில் இருதரப்புக்கும் காயங்கள் ஏற்பட்டது. இரு தரப்பும்
அளித்த புகாரை ஏற்று புகார்தார் தரப்பு மீது கீழமை நீதிமன்றம் விசாரிக்க தக்க வழக்கும்,
எதிரிகள் மீது இதச 147, 148, 341, 294B, 321, 307, 302 பிரிவுகளில் செஷன்ஸ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கீழமை செஷன்ஸ் நீதிமன்றத்தில்
எதிரிகள் 304(1), 323, 324 இ.த.ச. பரிவின் கீழ் தண்டிக்கப்பட்டார்கள். அதன் மீதான மேல்முறயீடு
இது.
உயர் நீதிமன்ற தீர்ப்பு: எதிரிகள் கொடுத்த புகாரின் பேரில் பதியப்பட்ட
வழக்கின் விவரத்தை அரசு தரப்பு இந்த வழக்கில் மறைத்து விட்டார்கள். சம்பவத்தின் போது
எதிரிகளுக்கு ஏற்பட்ட காய விவரங்களையும் சிகிச்சை அளித்த மருத்துவரையும் விசாரிக்கவில்லை.
காவல் நிலை ஆணை எண். 588 A வழக்கு மற்றும் எதிர் வழக்கு இருக்கின்ற நிலையில் காவல்
துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து சொல்லி உள்ளது. அதற்கு முரணாக காவல்
துறையினர் இந்த வழக்கில் செயல்பட்டு உள்ளதால் முழு உண்மைச் சம்பவத்தை அரசு தரப்பு முன்னிலைப்
படுத்தவில்லை, மறைக்க முற்பட்டு உள்ளார்கள், எனவே சந்தேகத்தின் பலனை எதிரிகளுக்கு அளித்து
அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
......P.K. Chandran, advocate, Erode
Comments
Post a Comment