Skip to main content

Posts

Showing posts from May, 2022

2. பேட்டி : செல்வராணி

  மருதமுத்து நாகரத்தினம் தம்பதிக்கு மகளாகப் பிறந்த செல்வராணி திருச்சிராப்பள்ளி சட்டக் கல்லூரியில் 2005 ஆண்டு சட்டம் முடித்து குற்றவியல் வழக்கறிஞர் திரு.ஜேசு பால்ராஜ் இடம் 5 ஆண்டுகள் இளநிலை வழக்கறிஞர் ஆக பணியாற்றினார். தற்போது திருச்சியில் வழக்கறிஞர் தொழில் புரிகிறார், அங்கு தாயாருடன் வசித்து வருகிறார். வாசிப்பார்வமும் தீவிர பயண ஈடுபாடும் கொண்டவர், தொடர் பயணங்களில் இருப்பவர்.   நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த பயணம் முடிந்து அவர் ஊர் திரும்பும் போது நாமக்கல்லில் நண்பர்களுடன் அவரை சந்தித்து நான் எடுத்த பேட்டி இது.   ..... கிருஷ்ணன், வழக்கறிஞர், ஈரோடு. நன்றி :  https://www.jeyamohan.in/109537/ செல்வராணி 38 வயது, தனி நபர், திருச்சியில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். ஒரு மாதத்திற்கு முன் திருச்சியில் இருந்து ஒரு வெஸ்பாவில் கிளம்பி மணாலி வரை சென்றார், 30 நாட்களுக்கு பிறகு திருச்சி திருப்பும் வழியில் 24-5-2018 மாலை பத்து நண்பர்களுடன் நாமக்கல்லில் சந்தித்து அவருடன் உரையாடினோம். பொருத்தமாக சுபாஷ் சிலையின் முன்பு ஒரு படமும் எடுத்துக்கொண்டோம். அறிந்த நபர்களை முழுவதும் நாம் அறிவதில்லை, மிக

3. Appointment of Guardian - பாதுகாவலரை நியமித்தல்

...Mohan Shankar, Advocate, Erode K.P.Natarajan & another Vs Muthammal and others (S.C)   Reported in: CDJ 2021SC458 https://indiankanoon.org/doc/171079722/   சட்டப் பிரிவு : Order XXXII, Rule 3 CPC     வழக்கின் சங்கதி :   கீழமை நீதிமன்றத்தில் வாதி ஒரு ஏற்றதை ஆற்றும் பரிகாரம் வேண்டி ஒரு அசல் வழக்கை   தாக்கல் செய்து   இருந்தார். இதில் ஒரு பிரதிவாதி இளவர்   ஆவார். ஆகவே அவருக்கும் அவரின் தந்தைக்கும் வாதி நீதிமகன்றம் மூலம் ஒரு அழைப்பாணை அனுப்பினார். இதில் இளவர்   ஆஜர் ஆகவில்லை அவருக்காக அவர் தந்தை பாதுகாவலர் என்கிற முறையில் ஆஜர் ஆனார். வாதி தந்தையை இளவரின் பாதுகாவலர் என இந்த வழக்கில் சேர்க்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்தார், அது நீதிமன்றத்தால்   அனுமதிக்கப்பட்டது, தந்தை இளவரின் சார்ப்பில்   ஒரு வக்காலத்து தாக்கல் செய்தார்.            பின்னர் வாதியின் வழக்கு வென்றது, அது ஒரு ஒருதலைப்பட்ச தீர்ப்பாகும். தீர்ப்பிற்குப் பிறகு வாதி ஒரு நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார். இதில் யாரும் ஆஜர் ஆகாததால் வாதிக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக நிறைவேற்று மனு அனுமதிக்கப்பட்டது. நீதி

4. Mortgage and sale - அடமானமும் விற்பனையும்

....Mohan Shankar, advocate, Erode H.S.Goutham vs Rama Murthy And Anr. https://indiankanoon.org/doc/157385843/   சட்ட பிரிவுகள் : order 21 Rule 90, 94 of the Code of Civil Procedure. வழக்கு சங்கதி :  பிரதிவாதி தன் சொத்தை வாதியிடம் அடமானம் வைத்து கடன் பெறுகிறார். கடனை உரிய காலத்தில் செலுத்தாததால் பணத்தை வசூலிக்க வாதி நீதிமன்றத்தில் அசல் வழக்கு தொடர்ந்து சமரச உடன்பாடு ஏற்பட்டு அதன் அடிப்படையில் தீர்ப்பு பகரப் படுகிறது. தீர்ப்புக்கு பின் உடன்படிக்கை படி பிரதிவாதி பணம் செலுத்தாததால்    சொத்தை நிறைவேற்று மனு மூலம் ஏலத்துக்கு கொண்டு வருகிறார். நிறைவேற்று மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்று மனுவில் ஆஜரான பிரதிவாதி விசாரணை நீதமன்றத்தில் இது தவறான வழிமுறையில் விசாரணை நீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்பு ஆகும் என பிரதிவாதி   வாதிடுகிறார். இதை ஏற்காத நீதிமன்றம் சொத்தை ஏலத்துக்கு கொண்டுவந்து ஒரு ஏலதாரருக்கு விற்பனை செய்கிறது, ஏலதாரர் செலுத்திய தொகையை வாதி பெற்றுக் கொள்கிறார். இதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் பிரதிவாதி மேல்முறையீடு செய்கிறார். உயர் நீதிமன்றத்திலும் பிரதிவா

5. Arrest without notice - முன் அறிவிப்பு இன்றி கைது செய்தல்

.... A.S. Krishnan, Advocate, Erode Jagdish Shrivastav  Vs. State of Maharashtra & another 2022(1)MWN (Cr) 487   சட்ட பிரிவுகள் :   Crpc Sec.41-A   வழக்கு சங்கதி : மனுதாரர் ஒரு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஒரு முன் பிணை கேட்டு மனு தாக்கல் செய்கிறார். அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர் உச்ச நீதிமன்றத்தை நாடும் முன் காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறது.   உச்ச நீதிமன்றம் தீர்ப்பு : மனுதாரரை கைது செய்யும் முன் அவருக்கு குவிமுச பிரிவு 41 A படி முன் அறிவிப்பு கொடுத்து இருக்க வேண்டும். இதைச் செய்யாமல் அவரை கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. கைது செய்த காவல் அதிகாரி தனது அதிகார வரம்பை மீறி உள்ளார். அர்நேஷ் குமார் வழக்கில் தரப்பட்ட வழிகாட்டு நெறிகளை பின்பற்ற வில்லை. இப்போது மனுதாரர் கைதில் உள்ளதால் விசாரணை நீதிமன்றத்தை அணுகி வழக்கமான பிணை மனுவை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நீதிமன்றம் அர்நேஷ் குமார் வழக்கு நெறிகளை கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.   (அர்நேஷ் குமார் வழக்கு பற்றி கடந்த இதழுக்கு முந்தைய இதழில் விளக்கப் பட்டது)   உ

6. Multiple FIRs in same facts - ஒரே சங்கதிக்கு பல முதல் தகவல் அறிக்கைகள்.

Nanjil Sampath vs State of Tamil Nadu   https://indiankanoon.org/doc/120563323/   ... M.V. Chandrasekar, Advocate, Erode.   சட்ட பிரிவுகள்: 354 500, 509 of IPC, Section 4 of Tamil Nadu Prohibition of Harassment of Women Act 2002   வழக்கு சங்கதி: நாஞ்சில் சம்பத் ஒரு பொதுக் கூட்டத்தில் தமிழிசை சௌந்தர் ராஜனை தரக் குறைவாக பேசியதாக தமிழிசை சௌந்தர் ராஜநுக்காக பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு நபர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நாஞ்சில் சம்பத் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் மேற்சொன்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி நாஞ்சில் சம்பத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.   தீர்ப்பு: இதச பிரிவு 500 ன் கீழ் உள்ள புகாரை பாதிக்கப்பட்ட   நபர் தான் புகார் அளிக்க முடியும், வேறு நபர் கொடுத்த புகாரை காவல்துறை விசாரிக்க இயலாது. ஆகவே இந்த வழக்கில் இந்தப் பிரிவு நிலைக்கத் தக்கது அல்ல. ஆனால் பிற குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது ஆகவே முழு வழக்கையும் ரத்து செய்ய இயலாது. மேலும் ஒரே சங்கதிக்கு வேறு வேறு முதல் தகவல் அறி

7. உலக சமய மாநாடு சிக்காக்கோ - சுவாமி விவேகானந்தர்

  அமெரிக்க சகோதர, சகோதரிகளே! நீங்கள் உளங்கனிந்து எமக்களித்த இதயபூர்வமான வரவேற்புக்குப் பதிலளிக்க எழுகையில் என் இதயம் சொல்லொணா மகிழ்ச்சியில் திளைக்கின்றது. உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த ஆதீனத்தின் பெயரால் உங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்; சமயங்களது தாயின் பெயரால் உங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்; எல்லா வகுப்பினரையும், பிரிவினரையும் சேர்ந்த கோடானு கோடி இந்துமக்களின் பெயரால் உங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன். சகிப்புணர்வுச் சிந்தனையை பல்வேறு நாடுகளுக்கும் எடுத்துவந்த பெருமை தூரத்து நாடுகளிலிருந்து வந்தவர்களையே சாரக்கூடும் என்று கீழைத்தேயப் பேராளர்களைக் குறித்து இந்த மேடையில் உரையாற்றிய சில பேச்சாளர்களுக்கும் நான் நன்றி கூறுகின்றேன். சகிப்புத் தன்மை மற்றும் அனைத்து நெறிகளையும் அரவணைக்கும் தன்மை இரண்டையும் உலகிற்குப் போதித்த சமயத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் நான் பெருமைப்படுகின்றேன். எல்லா நெறிகளையும் சகிக்கும் தன்மையில் மாத்திரம் நாங்கள் நம்பிக்கை உடையவர்கள் அல்லர். எல்லாச் சமயங்களையும் மெய்யானவை என்றே நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். உலகளாவிய சமயங்கள் மற்றும் நாடுகள் அனைத்தையும் சேர்ந்த அ