...Mohan Shankar, Advocate, Erode
K.P.Natarajan
& another Vs Muthammal and others (S.C)
Reported
in: CDJ 2021SC458
https://indiankanoon.org/doc/171079722/
சட்டப்
பிரிவு : Order XXXII, Rule 3 CPC
வழக்கின்
சங்கதி : கீழமை நீதிமன்றத்தில் வாதி ஒரு ஏற்றதை
ஆற்றும் பரிகாரம் வேண்டி ஒரு அசல் வழக்கை தாக்கல்
செய்து இருந்தார். இதில் ஒரு பிரதிவாதி இளவர் ஆவார். ஆகவே அவருக்கும் அவரின் தந்தைக்கும் வாதி
நீதிமகன்றம் மூலம் ஒரு அழைப்பாணை அனுப்பினார். இதில் இளவர் ஆஜர் ஆகவில்லை அவருக்காக அவர் தந்தை பாதுகாவலர்
என்கிற முறையில் ஆஜர் ஆனார். வாதி தந்தையை இளவரின் பாதுகாவலர் என இந்த வழக்கில் சேர்க்கக்
கோரி ஒரு மனு தாக்கல் செய்தார், அது நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டது, தந்தை இளவரின் சார்ப்பில் ஒரு வக்காலத்து தாக்கல் செய்தார்.
பின்னர்
வாதியின் வழக்கு வென்றது, அது ஒரு ஒருதலைப்பட்ச தீர்ப்பாகும். தீர்ப்பிற்குப் பிறகு
வாதி ஒரு நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார். இதில் யாரும் ஆஜர் ஆகாததால் வாதிக்கு
சாதகமாக ஒருதலைபட்சமாக நிறைவேற்று மனு அனுமதிக்கப்பட்டது. நீதிமன்றமே தீர்ப்புப் படி
சொத்தை கிரையம் செய்து கொடுத்தது. பிரதிவாதிகள் கிரையத்துக்குப் பின்னர் 3 ஆண்டுகள் காலதாமதமாக அசல் வழக்கில் இந்த ஒருதலை பட்சமாக பகரப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக்
கோரி பிரிவு 5 காலவரம்பு சட்டத்தின் கீழ் ஒரு
காலதாமத மன்னிப்பு மனுவுடன் கீழமை நீதிமன்றத்தில்
பிரதிவாதிகள் ஒரு மனு தாக்கல் செய்தனர். இந்த காலதாமத மன்னிப்பு மனு தள்ளுபடி செய்யப் பட்டது. அதன் மீது பிரதிவாதிகள் உயர் நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்தார்கள்.
உயர்நீதிமன்றம், அரசியல் சட்டம் ஷரத்து 227 ஐ முடுக்கிவிட்டது கீழமை நீதிமன்ற ஆவணங்களை
தருவித்து பார்வையிட்டது , கீழமை நீதிமன்றம் உரிமையியல் சட்டம் Order XXXII, Rule 3, ஐ முறையாக பயன்படுத்தவில்லை
எனக் கூறி அசல் வழக்கின் ஒருதலைப்பட்ச தீர்ப்பை
ரத்துசெய்தது. வாதி இதை எதிர்த்து மேல்முறையீட்டு
சிறப்பு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். ஒரு காலதாமத மன்னிப்பு
மனுவில் அதை பரிசீலிக்காமல் தேவையற்று அரசியல்
சட்டத்தை முடுக்கிவிட்டது தவறு என்பது வாதியின் வாதம் ஆகும்.
உச்சநீதிமன்ற
தீர்ப்பு : கீழமை நீதிமன்றம் Order XXXII,
Rule 3, பிரிவை முறையாக பயன்படுத்தாமல் பெயரளவில்
இளவரின் பாதுகாவலரை நியமனம் செய்தது துவக்க நிலையிலேயே தவறு என்றும் காலவரம்பு
சட்டம் பிரிவு 5 ல் உள்ள மனுவை பரிசீலிக்கையில் உயர்நீதிமன்றம் அரசியல் சட்டம் பிரிவு
227 ஐ பயன்படுத்தி ஒருதலைபட்ச தீர்ப்பை ரத்து செய்தது சரி என்றும் தீர்ப்பு வழங்கியது
வாதியின் மனுவை தள்ளுபடி செய்தது.
......Mohan
Shankar, Advocate, Erode
Comments
Post a Comment