Skip to main content

6. Multiple FIRs in same facts - ஒரே சங்கதிக்கு பல முதல் தகவல் அறிக்கைகள்.


Nanjil Sampath vs State of Tamil Nadu

 

https://indiankanoon.org/doc/120563323/

 

... M.V. Chandrasekar, Advocate, Erode.

 

சட்ட பிரிவுகள்: 354 500, 509 of IPC, Section 4 of Tamil Nadu Prohibition of Harassment of Women Act 2002

 

வழக்கு சங்கதி: நாஞ்சில் சம்பத் ஒரு பொதுக் கூட்டத்தில் தமிழிசை சௌந்தர் ராஜனை தரக் குறைவாக பேசியதாக தமிழிசை சௌந்தர் ராஜநுக்காக பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு நபர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நாஞ்சில் சம்பத் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் மேற்சொன்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி நாஞ்சில் சம்பத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

தீர்ப்பு: இதச பிரிவு 500 ன் கீழ் உள்ள புகாரை பாதிக்கப்பட்ட  நபர் தான் புகார் அளிக்க முடியும், வேறு நபர் கொடுத்த புகாரை காவல்துறை விசாரிக்க இயலாது. ஆகவே இந்த வழக்கில் இந்தப் பிரிவு நிலைக்கத் தக்கது அல்ல. ஆனால் பிற குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது ஆகவே முழு வழக்கையும் ரத்து செய்ய இயலாது. மேலும் ஒரே சங்கதிக்கு வேறு வேறு முதல் தகவல் அறிக்கைகள் இருக்க இயலாது ஆகவே பல்லாவரம் காவல் நிலைய ஆய்வாளர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மட்டும் விசாரிக்கப்பட வேண்டும், பிற முதல் தகவல் அறிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது.

 

.... M.V. Chandrasekar, Advocate, Erode.

Comments