Skip to main content

4. Returning the Charge Sheet - குற்றப் பத்திரிக்கையை திரும்ப அளித்தல்

 

... M.V. Chandrasekaran, Advocate, Erode

 

Nisha. I. vs. State of Tamil Nadu,rep. by the Additional Chief Secretary  to  Govt., Home,Prohibition  and Excise Department, Chennai,(DB).

2022(1) MWN(Cr). 628.

 

https://indiankanoon.org/doc/65982746/

 

சட்டப்பிரிவு : Rule 25 of the Criminal Rules of Practice, 2019.

 

வழக்கு சங்கதி : இது ஒரு ஆட்கொணர்வு மனு ஆகும். மனுதாரரின் தந்தையை  குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்துவிட்டனர்.  அரசு குண்டர் தடுப்பு சட்டத்தில் கூறப் பட்டுள்ள நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை எனவே தனது தந்தையை விடுவிக்க வேண்டும் என மனுதார் கோருகிறார்.

 

உயர்நீதிமன்ற தீர்ப்பு:  இவ்வழக்கில் குண்டர் சட்டத்தில் கூறியுள்ளபடி 90 நாட்களுக்குள் போலீசார் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யவில்லை. கோப்பை பார்வையிட்டபோது மிக தாமதமாக இது தாக்கல்  செய்யப் பட்டது தெரிகிறது. நீதித்துறை நடுவர் இதை திருப்பி இருக்கிறார். இவ்விடத்தில் இதேபோல நீதித்துறை நடுவர்கள் DNA அறிக்கை இல்லை, தடையா அறிவியல் அறிக்கை இல்லை என காரணம் கூறி காவல் துறையால்  தாக்கல் செய்யப்பட்ட குற்ற பத்திரிகைகளை திருப்புவதை அறிகிறோம். இது குற்றவியல் நடைமுறை விதிகள் 2019 பிரிவு  25 க்கு  எதிரானது. இந்த விதிகளின் படி நீதித்துறை நடுவர்கள் குற்றப் பத்திரிக்கையை திருப்ப முடியாது எனவே இனி இந்த விதியை கண்டிப்புடன் பின்பற்றுமாறு கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தப் படுகிறது.             

---M.V. Chandrasekaran, Advocate, Erode

...................

Comments