Skip to main content

2. Stranger to a sale deed can challenge - கிரைய ஆவணத்துக்கு சம்பந்தமற்ற நபர் அதை எதிர்க்கலாம்

 

--- V.Sampathkumar, Advocate, Erode

 

 Vidhyadhar Vs Manickrao and another reported in CDJ 1999 SC 1017=1999 3 SCC 573.  

 

https://indiankanoon.org/doc/1332419/

 

சட்டப்பிரிவு : சொத்து மாற்றச் சட்டம் பிரிவு 17

 

 

சம்பந்தமற்றவர் ஒரு  கிரைய ஆவணத்தின் போதாமையோ அல்லது மறுபயன் குறைவு என்றோ எதிர்க்க இயலாது. ஆனால் ஒரு அசல் நோக்கத்துக்காக எழுதப்பட்ட கிரைய பத்திரத்துக்கும்  தீய எண்ணத்துடன்  எழுதப்பட்ட கிரைய பத்திரத்துக்ககும் வேறுபாடு உண்டு. ஒரு கிரைய பத்திரம்  உரிமை மாற்றம் செய்யும் நோக்கம் அற்று பாசாங்காக எழுதப் படுமானால் ஒரு மூன்றாம் நபர் கூட அதன் செல்லும் தன்மை குறித்து வழக்கு தாக்கல் செய்யலாம். 

 

நீதிமன்ற தீர்ப்பு:  உதாரணமாக ஒரு நில உரிமையாளருக்கு பல நிலங்கள் உள்ளது, தனது ஒரு நிலத்தின் குத்தகை தாரரை வெளியேற்ற அவருக்கு நியாமான காரணம் இல்லை. இந்த நிலையில் பாசாங்காக பெயரளவில் மட்டும் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பது போல ஒரு கிரைய பத்திரம் எழுதி அந்த நிலத்தை கிரையம் பெற்றவர் மூலம் இந்த குத்தகை தாரரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கிறார். இந்நிலையில் இது ஒரு வஞ்சக கூட்டு எனக் கூறி அந்த குத்தகைதாரர் இந்த கிரயத்தை ரத்து  செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.      

 

...Sampathkumar, Advocate, Erode

 

(ஆசிரியர் குழு : அளவை மூன்றாவது இதழில் இந்த தீர்ப்பு வேறு காரணத்துக்காக இடம்பெற்றது) 

......

Comments