Skip to main content

5. Joint account holder not liable - கூட்டு கணக்காளருக்கு கடப்பாடு இல்லை

 

---A.S. Krishnan, Advocate, Erode.


Mrs. Aparna A. Shah Vs M/s Sheth Developers Pvt. Ltd. & Anr.

https://indiankanoon.org/doc/162382342/

 

சட்டப் பிரிவு : மாற்றுமுறை ஆவண  சட்டம் பிரிவு 138.

 

 

வழக்கு சங்கதி:  நில விரிவாக்கம் சம்பந்தமாக கணவர் தானும் தன்  மனைவியும்  கூட்டாக தொடங்கி  உள்ள வங்கிக் கணக்கில் இருந்து தான் மட்டும் கையெழுத்து செய்து ரூபாய் 25 கோடிக்கு ஒரு காசோலையை ஒரு நிறுவனத்துக்கு வழங்குகிறார்கள். அந்த நிறுவனம் காசோலையை வசூலுக்கு தாக்கல் செய்தபோது அது போதிய பணம் இல்லை என திருப்பப் பட்டது. அதனால் அந்த நிறுவனம் கணவர் மனைவி இருவர் மீதும் மாற்றுமுறை ஆவண  சட்டத்தின் கீழ்  வழக்கு தொடுத்தது. ஒரு இடைக்கால மனுவின் விசாரணையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றத்தில் மனைவி இந்த வழக்கை விசாரணைக்கு முன்பே  தள்ளுபடி செய்யக் கோரினார்.  

 

உச்சநீதிமன்ற தீர்ப்பு:  இந்த காசோலையை பார்வையிட்ட போது இதில் இருவர் பெயரும் அச்சிடப்பட்டு உள்ளது, ஆனால் இதில் கணவர் மட்டும் தான் கையெழுத்து செய்துள்ளார். மனைவி கையெழுத்து செய்யவில்லை. ஒரு பங்குதாரர் நிறுவனம் அல்லது கூட்டாண்மை நிறுவனத்தில் தான் கையெழுத்து செய்யாதவரும் குற்றம் புரிந்தவர் ஆவார். இது ஒரு வங்கி கூட்டுக கணக்கு மட்டுமே. கையெழுத்து இடாத இந்த கூட்டுக கணக்காளர் மீது  மாற்றுமுறை ஆவண சட்டம் பிரிவு 138 இந்த கீழ் வழக்கு நிலைக்காது தக்கது அல்ல எனவே மனைவிக்கு எதிராக மட்டும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. 

 

    ---A.S. Krishnan, Advocate, Erode.      

Comments