Skip to main content

4. Mortgage and sale - அடமானமும் விற்பனையும்

....Mohan Shankar, advocate, Erode


H.S.Goutham vs Rama Murthy And Anr.


https://indiankanoon.org/doc/157385843/

 

சட்ட பிரிவுகள் : order 21 Rule 90, 94 of the Code of Civil Procedure.


வழக்கு சங்கதி பிரதிவாதி தன் சொத்தை வாதியிடம் அடமானம் வைத்து கடன் பெறுகிறார். கடனை உரிய காலத்தில் செலுத்தாததால் பணத்தை வசூலிக்க வாதி நீதிமன்றத்தில் அசல் வழக்கு தொடர்ந்து சமரச உடன்பாடு ஏற்பட்டு அதன் அடிப்படையில் தீர்ப்பு பகரப் படுகிறது. தீர்ப்புக்கு பின் உடன்படிக்கை படி பிரதிவாதி பணம் செலுத்தாததால்   சொத்தை நிறைவேற்று மனு மூலம் ஏலத்துக்கு கொண்டு வருகிறார். நிறைவேற்று மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்று மனுவில் ஆஜரான பிரதிவாதி விசாரணை நீதமன்றத்தில் இது தவறான வழிமுறையில் விசாரணை நீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்பு ஆகும் என பிரதிவாதி  வாதிடுகிறார். இதை ஏற்காத நீதிமன்றம் சொத்தை ஏலத்துக்கு கொண்டுவந்து ஒரு ஏலதாரருக்கு விற்பனை செய்கிறது, ஏலதாரர் செலுத்திய தொகையை வாதி பெற்றுக் கொள்கிறார். இதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் பிரதிவாதி மேல்முறையீடு செய்கிறார். உயர் நீதிமன்றத்திலும் பிரதிவாதி இது விசாரணை நீதிமன்றத்தில் தவறான வழிமுறையில் அடையப்பட்ட தீர்ப்பு என அதே நிலைப்பாட்டை எடுக்கிறார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒரு சிறப்பு நகர நீதிபதியை கொண்டு விசாரித்து அவரின் அடிப்படையில் இது பிரதிவாதி கூறியது போல விசாரணை நீதிமன்றத்தில் தவறான வழிமுறையில் அடையப்பட்ட தீர்ப்பு தான் என தீர்மானித்து அந்த தீர்ப்பை ரத்து செய்கிறது, ஏலத்தையும் சொத்து விற்பனையையும் ரத்து செய்கிறது. வாதியும் ஏலத்தில் சொத்தை வாங்கியவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்கிறார்.

 

உச்சநீதிமன்ற தீர்ப்பு : சமரசத்தின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது தவறு. ஏலம் பூர்த்தியாகி ஏலாதாரர் பெயரில் நீதிமன்றத்தால்  விற்பனை சான்றிதழும் வழங்கப்பட்டு விட்டது. இதை Order 21 Rule 92 of CPC உடன் Order 21 Rule 94 of CPC பிரிவை இணைத்து பார்க்கும் போது நீதிமன்றத்தால் விற்பனை சான்று வழங்கியது பின் அதை ரத்து செய்ய இயலாது, விற்பனை இறுதியானது. உயர்நீதிமன்றம் தன் அதிகாரத்தை மீறி உள்ளது என உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தது


......Mohan Shankar, advocate, Erode

Comments