Skip to main content

3. Registration of court decree - நீதிமன்ற சொத்து தீர்ப்பை பதிவு செய்தல்

 

---V.Sampathkumar, Advocate, Erode

 

 Mani @ Devaraju and others Vs     District Registrar, Administration, Dharmapuri,

 Reported in     CDJ 2021 MHC 3204.

 

சட்டப்பிரிவு : பதிவு சட்டம் பிரிவு 17(1),23

 

நீதிமன்ற சொத்து தீர்ப்பை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா, அதற்கு கால வரம்பு உள்ளதா என்கிற கேள்வி மேற்படி வழக்கில் எழுந்தது.   

 

உயர்நீதிமன்ற தீர்ப்பு : இது குறித்து ஏராளமான ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது எனவே இந்த பொது உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பதிவு சட்டம் பிரிவு 17(1) படி ஒரு நீதிமன்ற சொத்து தீர்ப்பை கட்டாயம் பதிவு செய்ய வேண்டியது இல்லை. காலவரம்பு பற்றி பேசும் இதே சட்ட பிரிவு 23 இந்த நீதிமன்ற தீர்ப்புக்கு பொருந்தாது. எனவே அணைத்து மாவட்ட பதிவாளர்களும் இனிமேல் நீதிமன்ற சொத்து தீர்ப்புகளை காலவரம்பின்றி பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.      

-----V. Sampathkumar, Advocate, Erode

Comments