Skip to main content

5. Granting police Custody - போலீஸ் காவலுக்கு அனுமதித்தல்


...M.V. Chandrasekaran, Advocate, Erode.

 

Palanisamy vs State by Inspector

Police, EOW, Dindigul.

 

2012 ( 2) M.L.J. (Crl) P. 737

 

https://indiankanoon.org/doc/62875078/

 

வழக்கு விவரம்:

 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றொருவருடன் சேர்ந்து கடந்த 2009 ம் வருடம், ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 25,000 வட்டி தருவதாக வாக்குறுதி அளித்து ஒருவரிடம் ரூ.1,07,31,500. வசூல் செய்து மோசடி செய்தததாகக் கூறி இ.த.ச. பிரிவுகள் 406 மற்றும் 420 ன் படியும், பிரிவு 5, தமிழ்நாடு வைபீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம் (TNPID Act) ன் படியும் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு  23.9.2011 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். 4.10.2011 அன்று எதிரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்கிறார்கள். 10.10.2011 அன்று  சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றம் இரண்டு நாட்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்து

உத்தரவிடுகிறது . அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிரி சீராய்வு மனு தாக்கல் செய்கிறார்.

 

உயர் நிதிமன்ற தீர்ப்பு :

 

குவிமுச பிரிவு 167 படி ஒரு எதிரியை அவர் கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்கு பின் விசாரணைக்கு போலீஸ் காவலுக்கு உட்படுத்த முடியாது என சென்னை  உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

....M.V. Chandrasekaran, Advocate, Erode

Comments