Skip to main content

3. Cross examination without filing written statement - எதிர் உரை தாக்கல் செய்யாமல் குறுக்கு விசாரணை


...T. Senthil kumar, advocate, Erode

 

 2022 (1) CTC page 497

 

https://indiankanoon.org/doc/126301480/

 

 

உரிமையியல் வழக்குகளில் பிரதிவாதி எதிருரை தாக்கல் செய்யாமல் எதிர்  வழக்காடுதல்.

 

உரிமையியல் வழக்குகளில் பிரதிவாதி தனது எதிருரையை தாக்கல் செய்து எதிர்  வழக்காடுவதுதான் பொதுவான நடைமுறை. எதிருரை தாக்கல் செய்யாத பிரதிவாதி மீது நீதிமன்றம் ஒருதலைபட்ச உத்தரவு பிறப்பித்து வழக்கை நடத்தும். அவ்வாறு  தனது எதிருரை தாக்கல் செய்யாமல் உள்ள பிரதிவாதிக்கும் உள்ள உரிமை பற்றி 2022 (1) CTC பக்கம் 497-ல் வந்துள்ள இந்த சுவாரஸ்யமான வழக்கு தீர்ப்பு சொல்கிறது.

 

உரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை 8  பிரிவு 10-ல் வழக்கின் பிரதிவாதி தனது எதிருரையை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் தாக்கல் செய்யாதபோது நீதிமன்றம் அவர் மீது தீர்ப்பு பிறப்பிக்கலாம் என்றும் வழக்கு பற்றிய இன்னபிற உத்தரவுகளையும் பிறப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.

அவ்வாறு எதிருரை தாக்கல் செய்யாத பிரதிவாதிக்கும் சில உரிமைகள் உள்ளன. எதிருரை தாக்கல் செய்யாத பிரதிவாதி, வாதியை குறுக்கு விசாரணை நீதிமன்றத்தில் செய்யலாம், மற்றும் வழக்கில் வாதாடவும் செய்யலாம்.

ஆனால் அத்தகைய குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் வழக்கில் வாதாட உள்ள உரிமையும் வரன்முறைகளுக்கு உட்பட்டது. அதாவது தான் எதிருரை தாக்கல் செய்து நேரடியாக செய்யவேண்டியவற்றை செய்யாமல், மறைமுகமாக தன் வழக்கென ஒன்றை சொல்லமுடியாது. அப்பிரதிவாதி தனது வழக்கென எதையும் கேள்வி கேட்க முடியாது. வாதாடவும் முடியாது.

ஆனால் குறுக்கு விசாரணை செய்யும் போது வாதியின் வழக்கின் செல்லுந்தன்மை பற்றிய கேள்விகளை கேட்கமுடியும், வழக்கின் செல்லுந்தன்மை பற்றிய விசயங்களை வாதாடவும் முடியும் என்று மேற்படி தீர்ப்பு கூறுகிறது.

 

...T. Senthil kumar, advocate, Erode.

Comments