Skip to main content

4. Admission made at police enquiry காவல்துறை விசாரணையில் ஏற்றுக் கொண்ட சங்கதி.

  

...V. Sampath Kumar, Advocate, Erode

 

Paneerselvam Vs Manoharan

 

2017 (1) CTC 18:

 

https://indiankanoon.org/doc/110271965/

 

வழக்கு வினா : ஒரு தரப்பினர் காவல்துறை விசாரணையில் எழுதிக் கொடுத்த வாக்கு மூலத்தில் ஏற்றுக் கொண்ட சங்கதிகளை பின்னர் நீதிமன்றத்தில் பயன்படுத்த முடியுமா ?

 

உயர்நீதிமன்ற தீர்ப்பு : வாதி நிலக்கடலை வாங்கிய வகையில் பிரதிவாதி பணம் தரவேண்டும் என ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார். அதில் இதெ பிரச்சனைக்கு முன்னர் காவல் நிலையத்தில் தான் ஒரு புகார் அளித்ததாகவும் அதில் பிரதிவாதி நிலக்கடலை வாங்கியதையும் பணம் தர வேண்டி இருப்பதையும் ஒப்புக்கொண்டு ஒரு வாக்குமூலம் கொடுத்துள்ளார் எனவும் எனவே வழக்கை தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் கோருகிறார்.  பிரதிவாதி அந்த வாக்குமூலம் தான் தன்னிச்சையாக ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்தது அல்ல எனவும் காவல் துறையினர் அழுத்தம் கொடுத்ததால் அவ்வாறு எழுத்துக் கொடுத்தேன், தான் வற்புறுத்த தப் படவில்லை என்றால் அவ்வாறு எழுத்துக் கொடுத்து இருக்க மாட்டேன் எனவும் கூறுகிறார்.

 

இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27 படி காவல்துறை விசாரணையில் எழுதிக் கொடுத்த வாக்கு மூலம் செல்லத் தக்கது அல்ல அதற்கு சான்று தகுதி இல்லை என தீர்ப்பளித்தது. வாதியின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

--  V. Sampath Kumar,

 Advocate, Erode

Comments