Skip to main content

4. Possession in Specifc Releif Act - குறித்தவகை நிவாரண சட்டத்தின் கீழ் அனுபவம்


...Mohanshankar, Advocate, Erode

 

MANICKAM @ THANDAPANI & ANR. VS VASANTHA

 

 https://drive.google.com/file/d/1Nap09hQZN7PihDtEFQmwzY2HIk3Cx-JJ/view?usp=sharing

 

வழக்கு சங்கதி : வாதி பிரதிவாதியுடன் ஒரு விற்பனை உடன்படிக்கை ஏற்படுத்துகிறார். 2400 சதுர அடிகள் விரியும் காலி மனையின் உரிமையாளர் ஆன பிரதிவாதி மீத விற்பனை தொகை பெற்ற  உடன் தன மனையை காலியான நிலையில் வாதிக்கு அனுபவ மாற்றம் செய்து தர வேண்டும் என்பது ஒப்பந்தம்.   உரிய காலத்தில் கிரையம் செய்து கொடுக்காததால் வாதி கிரையம் செய்து தரக்  கோரி ஒரு குறித்தவகை நிவாரண வழக்கு தாக்கல் செய்கிறார்.  

 

பிரதிவாதி தனது எதிர் வாதுரையில் இந்த நிலத்தை விற்க நகர உச்சவரம்பு சட்டம் தடுக்கிறது என்றும் உரிய அதிகார அமைப்பு அனுமதி அளித்தால் மட்டுமே தன்னால் கிரையம் செய்து கொடுக்க இயலும் வேண்டும் இதுவரை இந்த அனுமதியை பெற  எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் கூறுகிறார்.  

 

வாதி, பிரதிவாதி வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதாக கூறுகிறார். பின்னர் பிரதிவாதி ஒரு கூடுதல் எதிர் வாதுரையை தாக்கல் செய்கிறார் அதில் இந்த மனையின் இன்னொரு பகுதியை ஒரு லட்சுமிபதி என்பவருக்கு அவரிடம் பெற்ற கடனை நேர் செய்ய  விற்று விட்டதாகவும் கூறுகிறார். கீழமை நீதிமன்றம் வாதியின் வழக்கை தள்ளுபடி செய்து ரூபாய் 5000 என்கிற சொற்ப நஷ்ட ஈடு வழங்கியது.   இதை எதிர்த்து வாதி உயர் நீதிமன்றத்தில் ஒரு மேல் குறியீடு தாக்கல் செய்கிறார். இந்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் அனுமதிக்கிறது. ஆனால் அதன் பின்பும் பிரதிவாதி கிரையம் செய்து கொடுக்காததால், கீழமை நீதிமன்றம் கிரையம் செய்து கொடுத்தது. அதன் பின் வாதி தன்னை கிரைய சொத்தில் அனுபவத்தில் அமர்த்த வேண்டும் என கீழமை நிறைவேற்று நீதிமன்றத்தில் ஒரு நிறைவேற்று மனு தாக்கல் செய்கிறார்.        

இந்த நிறைவேற்று மனுவை பிரதிவாதி எதிர்த்து வாதிடுகிறார், அதில் CPC  Order XXI Rule 35(3) படி தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்றும், கிரைய ஒப்பந்தப் படி காலி மனையை தான் அனுபவம் அளிக்க முடியும் எனவும் தற்போது தம்மிடம் 750 சதுரடி தான் அனுபவத்தில் உள்ளது எனவும் மீதி உள்ள இடத்தில் மேற்சொன்ன கிரையம் பெற்ற லட்சுமிபதி ஒரு செங்கல் கட்டிடத்தை கட்டி உள்ளதால் இந்த முழு இடத்தையும் அனுபவ மாற்றம் செய்ய இயலாது எனவும் வாதிடுகிறார். மேலும் அசல் வழக்கை தாக்கல் செய்யும் போது வாதி அனுபவ மாற்ற கோரிக்கையை வைக்கவில்லை எனவும் வாதிடுகிறார்.

 

இந்த வாதத்தை ஏற்ற நிறைவேற்று நீதிமன்றம் வாதியின் மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து வாதி மீண்டும் உயர் நீதிமன்றம் செல்கிறார், அங்கும் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் எனவும் Adcon Electronics Pvt. Ltd. v. Daulat&Anr (2001) 7 SCC 698 என்கிற முன் தீர்ப்பு செல்லும் எனவும் வாதி வழக்கை தாக்கல் செய்யும் போதே அனுபவ உரிமை கோரி தாக்கல் செய்திருக்க வேண்டும் எனவும் அது தவறியதால் இந்த புது கோரிக்கையை இப்போது கோர இயலாது எனவும் வேண்டும் என்றால் இதே கோரிக்கைக்கு வாதி தனியாக மீண்டும் ஒரு அசல் வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் தீர்ப்பளித்து வாதியின் மேல் முறையீடை தள்ளுபடி செய்கிறது. வாதி மீண்டும் இதை எதிர்த்து இந்திய அரசமைப்பு சட்டம் ஷரத்து 227 படி  உச்ச நீதிமன்றம் செல்கிறார்.     

 

 

உச்ச நீதிமன்ற தீர்ப்பு : பிரிவு 22 குறித்த வகை நிவாரண சட்டத்தை கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த புதிய பிரிவே இந்த அனுபவ உரிமையை பின்னால் கோரும் நிகழ்வுகளால் ஏற்படும் பல்வேறு வழக்குகளின் பெருக்கத்தை தவிர்ப்பதற்காக சட்ட ஆணையத்தின் பரிந்துரையில் குறித்தவகை நிவாரண சட்டத்தில் இணைக்கப் பட்டு உள்ளது.   BabuLalv. HazariLal KishoriLal & Ors வழக்கில் இந்த பிரச்சனை உச்ச நீதிமன்றத்தால் விரிவாக பேசப்பட்டு உள்ளது. ஒரு குறித்த வகை நிவாரண வழக்கு வாதிக்கு சாதகமானால் தான் அனுபவ உரிமை என்கிற கேள்வியே எழும். ஆகவே அதன் பின் அனுபவ உரிமை கோரி புதிதாக  வாதி மனு தாக்கல் செய்யலாம்.  ஒரு சொத்தில் பிரதிவாதியும் இன்னொரு உரிமைதாரரும் முன்பிருந்தே  இணைந்து அனுபவத்தில் இருந்தால் வழக்கு வென்ற  வாதி ஒரு பாகப் பிரிவினை வழக்கை தாக்கல் செய்து  பிரதிவாதியின் பங்கில் தன்  அனுபவ உரிமையை கோரலாம்.   BabuLal வழக்கிற்கு பிறகு நிறைவேற்று கோரிக்கை என்பது  அனுபவ கோரிக்கையை உள்ளடக்கியது, வழக்கில் தனியாக கோர தேவை இல்லை என்றாகியது. Krishnamurthy Gounder v. Venkatakrishnan & Ors (AIR 2012 Madras 105)  தீர்ப்பில் கூட இது விவாதிக்கப் பட்டு உள்ளது. இந்த பார்வையை அடியொற்றி தான் பிரிவு 22 இணைக்கப்பட்டு உள்ளது.

 

 

இந்த பிரச்னையை வேறு ஒரு கோணத்தில் அணுக முடியும்   “no relief under clause (a) or clause (b) of sub-section (1) shall be granted by the court unless it has been specifically claimed”, என்கிற வாக்கியத்தை வாசிக்கும் போது இது கட்டாயத் தன்மையுடன் கூடிய  எதிர்மறை தன்மை உடையது ஆக தெரியும். ஆனால் உட்பிரிவு  (2) இல் at any stage of the proceeding” என்கிற வாசகம் இந்த கட்டாயத் தன்மையை விடுவித்து விடுகிறது. வாதி தனது அனுபவ உரிமையை வழக்கு நடக்கும் போது ஒரு வழக்குரை திருத்தம் மூலம் நுழைக்கலாம் ,மேல்முறையீட்டில் அல்லது நிறைவேற்று மனுவில் கூட புதிதாகக் கோரலாம்.

 

இறுதியாக இந்த மேல்முறையீட்டில் வழக்கு நடக்கும் போது பிரிதிவாதி சொத்தில் ஒரு பகுதியை விற்றுள்ளார், இது   lis pendens படி செல்லத்  தக்கது அல்ல.  வாதி முழு 2400 சதுரடி நிலத்தையும் அனுபவம் பெற உரிமை உடையவர் ஆவார். இதை கிரையம் பெற்ற லட்சுமிபதி தான் கட்டிய கட்டிடத்துக்கு உரிமை கோர இயலாது.  இந்த மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது.  

 

..Mohanshankar, Advocate, Erode

Comments