Skip to main content

3. Rejection of the Plaint - வழக்குரையை தள்ளுபடி செய்தல்

 

Order VII Rule 11 of CPC

 

2020 (2) MWN (Civil) 73 (Mad),

 

Jayamary vs Joseph

https://drive.google.com/file/d/1Twsq4iFaR2XzEaIeHAQ_1UQtT2ofuIaD/view?usp=sharing

வழக்குரையை  தள்ளுபடி செய்தல் மனுவை பரிசீலிக்கும் போது வழக்குரையில் உள்ள சங்கதிகளை மட்டும் காண வேண்டும், அதை மீறிச் செல்லக் கூடாது, எதிர் உரையை பரிசீலிக்க கூடாது என்பது பொதுவான விதி. ஆனால் மேற்படி தீர்ப்பில் மனு விசாரணையின் போது உயிலின் மூலம் எழுந்த அனைத்து பிரச்சையையும் நீதிமன்றம் பரிசீலித்தது.

 

இந்த வழக்கில் வாதியும் பிரதிவாதியும் கிறித்துவர்கள். தந்தைக்கு இரண்டு மனைவிகள். வாதி முதல் மனைவியின் மகன், பிரதிவாதி  சட்டப்பூர்வ இரண்டாவது மனைவி.  இவ்வழக்கில் வாதியின் தந்தை மாசிலாமணி தனது சொத்தை ஒரு உயில் மூலம் தனது இரண்டாவது மனைவிக்கு ஆயுள் அனுபவ உரிமையையும் அதன் பின் அவரின் பிள்ளைகளுக்கு முழு உரிமையும் வழங்கி  இருந்தார்.   மாசிலாமணிக்கும்  இரண்டாவது மனைவிக்கும் ஆரோக்கியசாமி என்கிற மகன் பிறந்து பின்னர் இறந்துவிட்டார். மாசிலாமணியும் பின்னர் இறந்துவிட்டார்.  எனவே இவ்வழக்கில் வாதி,  பிரதிவாதி தனது ஆயுட்காலத்தில் வழக்கு சொத்தை உரிமை மாற்றம் செய்வதற்கும் வில்லங்கத்திற்கு உட்படுத்துதலுக்கும் தடை கோரி நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரம் கேட்டிருந்தார். பிரதிவாதிக்கு அனுபவ உரிமை தான் உள்ளது என்றும் ஆரோக்கியசாமி இறந்து போன நிலையில் பிரதிவாதி காலத்திற்கு பின் தனக்குத் தான் இச்சொத்து முழு உரிமையுடன் வந்து சேரும் என்பது வாதியின் வாதம்.

 

மறுபுறம் இந்த சொத்தின் முழு உரிமைதாரர் தன் மகன் ஆரோக்கியசாமி தான் என்றும் ஆயுட்கால அனுபவம் மட்டும் தனது ஆயுள் வரை தள்ளிப் போடப்பட்டு உள்ளது என்றும்  ஆரோக்கியசாமி இறந்த மறுகணம் இந்த சொத்து முதல் வகுப்பு வாரிசு  என்கிற முறையில் தனக்கே உரிமையாகும் என்பது பிரிதிவாதியின் வாதம் ஆகும், இதை குறிப்பிட்டு வழக்குரையை  தள்ளுபடி செய்தல் மனு ஒன்றை பிரதிவாதி தாக்கல் செய்து இருந்தார். அதற்கு வாதி எதிர்வாதம் தாக்கல் செய்து இருந்தார். கீழ மை நீதிமன்றத்தில் இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது, அதை எதிர்த்து பிரதிவாதி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்கிறார்.

 

மனுவின் இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம்,

இந்த உயிலையும் பிரிவு 19 சொத்து மாற்ற சட்டத்தையும் பிரிவு 119 வாரிசு உரிமை சட்டத்தையும் கருத்தில் கொண்டு  பிரதிவாதி மனுவில் கோரியவாறு அவரின் மகன் ஆரோக்கியசாமி பிறந்த உடனேயே சொத்துகளின் மீது உரிமை ஏற்பட்டுவிட்டது என்றும் அவரின் அனுபவ உரிமை மட்டும் அவர் தாயார் இறக்கும் வரை தள்ளிப்போடப் பட்டுள்ளது என்றும் அரோக்யசாமி இறந்ததும் முதல் வகுப்பு வாரிசு என்கிற வகையில் பிரதிவாதி முழு உரிமை உடையவர் ஆகிறார் என முடிவு செய்தது. இதற்காக முழு வழக்கு விசாரணையும் அலைகழிப்பும் தேவை இல்லை என்று சீராய்வு மனுவை அனுமதித்து வழக்கு வாதுரையை தள்ளுபடி செய்தது.

 

V. Sampathkumar, advocate, Erode.

......


Refer Judgement below:

https://docs.google.com/document/d/1s5kPAGVxtqKGnMHaNxRzXeAGIJvaHgmu/edit?usp=sharing&ouid=101829436748961551702&rtpof=true&sd=true

Comments

  1. வணக்கம்.... மிக நல்ல அற்புதமான முயற்சி... வணிக சம்பந்தப்பட்ட (Company Law) வழக்குகளையும் பதிவிட்டால் இளம் வழக்கறிஞர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்... மேலும் வழக்குரை, வாதுரை, உறுத்துக்கட்டளை போன்ற சட்ட சொற்களுக்கு அடைப்புக் குறிக்குள் அதற்கான ஆங்கில சொற்களையும் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete

Post a Comment