Skip to main content

5. Cheating by forging a document - ஆவணங்களை மோசடியாக திருத்தி ஏமாற்றுதல்

 

2006(1) lw cr 316 Madras Hc

Devendran vs state by Hadthampatti p.s

https://indiankanoon.org/doc/1920412/


Acts : 114(g) Evidence act, 468,471,420 & 511 Ipc.

 

முக்கியத்துவம் :

 

இவ்வழக்கு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால் இந்திய சாட்சியம் சட்டத்தில் பிரிவு 114(g) என்கிற எதிர் அனுமானத்தை (adverse inference) விவாதிக்கிறது. மேலும் இதச பிரிவுகளில் சில குற்றங்களை தண்டிக்க அடிப்படையாக வேறு குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்பதும் கூறப்படுகிறது.

 

வழக்கின் சுருக்கம் :

 

இவ்வழக்கில் ஒருவர் ஏமாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் போலியாக நியமன ஆணை தயாரித்து (468 Ipc) அதை பயன்படுத்தி (471 Ipc) ஒரு அதிகாரியை நம்ப வைத்து ஏமாற்றி (420 Ipc) அரசு வேலை பெற முயன்றார் (511 Ipc) என்பதாகும். இரண்டு கீழமை நீதிமன்றங்கள் அவரை தண்டித்தாலும் சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

 

தீர்ப்பின் சாராம்சம் :

 

இந்திய சாட்சிய சட்டத்தில் பிரிவு 114 அனுமானங்கள் குறித்து பேசுகிறது. இதில் சில எடுத்துக் காட்டுக்கள் உள்ளனன. அதிலுள்ள 114(g) எடுத்துக்காட்டுப்படி ஒருவர் ஒரு ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால் அது அவருக்கு எதிரானது ஆகவே சமர்ப்பிக்கவில்லை என அனுமானிக்கலம். இந்த வழக்கில் நியமன ஆணை கடிதத்தின் மேலுறை சமர்ப்பிக்க படவில்லை. அதை அரசு தரப்புக்கு எதிராக நீதிமன்றம் அனுமானித்தது.

 

போலியாக ஒரு ஆவணத்தை தயாரித்து அதை பயன்படுத்தி ஒருவரை ஏமாற்றினால் முதலில் யார் போலியாக அந்த ஆவணத்தை தயாரித்தார் என நிரூபிக்க வேண்டும். இவ்வழக்கில் நியமன ஆணை அச்சடித்த அச்சக உரிமையாளரை  விசாரிக்கவில்லை ஆகவே அக்குற்றம் நிரூபிக்கப் படவில்லை. இதன் விளைவால் இத்துடன் இணைக்கப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் 471,420 & 511 Ipc அடிப்படை இழந்து போகிறது. ஆகவே நீதிமன்றம் அவரை விடுவிக்ககிறது.

 

இது தொடர்பான மேலும் ஒரு முக்கிய தீர்ப்பு : 2018(2) MWN cr 494 (supreme Court)

 A.S. Krishnan, Advocate, Erode.

.......

Comments