Skip to main content

5. Concurrent and consecutive sentence - ஒன்றன்பின் ஒன்றான தண்டனையும் ஏக கால தண்டனையும்

.... P.K. Chandran, advocate, Erode

 

வழக்கு:  Sunil Kumar @ Sudhir Kumar vs state of Uttar Pradesh

        2021 (2) SCC (Cr) 659    =    2021 (5) SCC 560

        https://indiankanoon.org/doc/115164075/

பிரிவு: Sec 31 (1), 220 (1), 433 and 433(A)  of  Cr.P.C.   

 

வழக்கின் சங்கதி: ஒரே வழக்கில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்ட எதிரிக்கு தண்டனை அளித்த விசாரணை நீதிமன்றம், மேற்படி தண்டனைகள் ஒன்றன்பின் ஒன்றாக  அல்லது ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று  குறிப்பிடப்படவில்லை. மேல்முறையீட்டிலும்   உயர்நீதிமன்றம் அதனை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

எதிரி வாதம்: தண்டனையானது ஒன்றன்பின் ஒன்றாக அல்லது ஏக காலத்தில்  என குறிப்பிடாத நிலையில் ஏக காலத்தில்  என்றுதான்  கருத முடியும் என்பது. 

 

தீர்ப்பு:  Muthu Ramalingam 2016 (8) SCC 313 என்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் படி ஒரு  வழக்கில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனைகள் அளிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில், அந்த தீர்ப்பில்    ஒன்றன்பின் ஒன்றாக அல்லது ஏக காலத்தில் என்று குறிப்பிடாத நிலையில் ஒன்றன்பின் ஒன்றாக என்று தான் கருத  வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இதில் ஆயுள் சிறை என்பது விதிவிலக்கு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பு இந்த முன்தீர்ப்புக்கு பொருந்தாது. இது இந்த தீர்ப்பில் எடுத்தாளப் பட்டுள்ளது. 

Comments