Skip to main content

3. Limitation for written statement எதிர்உரை தாக்கல் செய்யும் காலவரம்பு

  

.....Mohan Shankar, advocate, Erode

 

Desh Raj vs Balkishan (D) Through Proposed Legal Heirs

 

https://indiankanoon.org/doc/85876761/

 

சட்டப் பிரிவு : Order VIII Rule 1 of the Code (as amended by Section 16 of the Commercial Courts Act, 2015)

 

வழக்கு சுருக்கம் : வாதியும் பிரதிவாதியும் சகோதரர்கள். வாதி பிரதிவாதியின் சொத்தை வாங்க ஒரு கிரைய ஒப்பந்தம் செய்கிறார். உரிய காலத்தில் பிரதிவாதி கிரையம் செய்து தராததால் வாதி ஏற்றதை ஆற்றும் பரிகாரம் கோரி ஒரு அசல் வழக்கு தாக்கல் செய்கிறார். இந்த வழக்கில் பிரதிவாதி உரிய காலத்தில் எதிர் உரை தாக்கல் செய்யாததால் அவரது வழக்கு காப்பு ரத்து செய்யப்படுகிறது. இதை எதிர்த்து பிரதிவாதி உயர்நீதி மன்றம் செல்கிறார். அறிமுக நிலையிலேயே பிரதிவாதியின் மனு தள்ளுபடி ஆகிறது. பிரதிவாதி இதை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்கிறார்.

 

உச்சநீதிமன்ற தீர்ப்பு :

 

வர்த்தக வழக்குகளும் சாதாரண வழக்குகளும் உரிமையியல் நடைமுறை சட்டத்தின் பார்வையில் அடிப்படையில் வேறு வேறானவை. வர்த்தக வழக்கின் கால வரம்பின் அடிப்படையில் சாதாரண வழக்கின் கால வரம்பை பொருத்திக் கொள்ளக் கூடாது.

 

Oku Tech Pvt Ltd. v. Sangeet Agarwal and Others வழக்கை மேற்கோள் காட்டி உயர்நீதிமன்றம் 120 நாட்களில் எதிர் உரையை தாக்கல் செய்யும் கால வரம்பு மீற இயலாது எனக் கூறியது. Order VIII Rule 1 of the Code (as amended by Section 16 of the Commercial Courts Act, 2015) என்கிற பிரிவு கால வரம்பு குறித்து கண்டிப்பானது. 120 நாட்களுக்கு மேல் தாமதித்தால் பிரதிவாதியின் வழக்கு காப்பு உரிமை ரத்து செய்யப்படும் என்ற உயர்நீதிமன்ற பார்வை சரியல்ல. Atcom Technologies Ltd. v. Y.A. Chunawala and Co. reported in (2018) 6 SCC 639 , வழக்கில் Order VIII Rule 1 பிரிவில் உள்ள 90 நாட்கள் கால வரம்பானது நீதிமன்றத்தால் நீட்டிக்கத் தக்கது தான் என முன் தீர்ப்பு உள்ளது. இந்த பிரிவில் 90 நாட்கள் காலவரம்பை நீட்டிக்க நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் பறிக்கப் படவில்லை.

 

ஆனால் இதை வைத்து கால நீட்டிப்பு மனுக்களை ஒன்றன்பின் ஒன்றாக தாக்கல் செய்து வழக்கை இழுத்தடிப்பு செய்வதற்கு உதவும் என தவறாக அர்தப் படுத்தக் கூடாது. மிகக் கடினமான சூழலில் அல்லது போதுமான முன் ஜாக்ரதையுடன் இருந்தும் பிரதிவாதியின் கட்டுப்பாட்டை மீறிய நிகழ்வு நிகழ்ந்த சூழலில் நீதிமன்றம் அரிதாக கால நீட்டிப்பு செய்யலாம்.

 

இறுதியாக இந்த வழக்கில் இதை ஒரு முன் உதாரணமாக கொள்ளக் கூடாது என காரணம் கூறி பிரதிவாதிக்கு எதிர் உரையை தாக்கல் செய்ய ஒரு இறுதி வாய்ப்பு வழங்கியது மேல் முறையீடு அனுமதிக்கப் பட்டது.

 

ஆக நோக்கம் வெளிப்படை. சாதாரண வழக்கில் கூட உரிய காலத்தில் எதிர் உரையை தாக்கல் செய்ய வேண்டும், விதிவிலக்கான தருணத்தில் மட்டும் காலவரம்பை நீட்டிக்கும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். Kailash v. Nankhu  (2005) 4 SCC 480 மற்றும் Salem Advocates Bar Association, Tamil Nadu v. Union of India (2005) 6 SCC 344 ஆகிய தீர்ப்புகள் இப்போதும் செல்லத்தக்கது.

 

.....Mohan Shankar, advocate, Erode

Comments