Skip to main content

4. Un registered partnership firm's rights - பதிவு செய்யாத கூட்டாண்மை நிறுவனத்தின் உரிமைகள்

  

... T. Senthulkumar, Advocate, Erode.

 

SRI SAGANA Vs K. PADMAVATHI

 

https://indiankanoon.org/doc/106786580/

 

 (2022 (2) MWN Page 431)

 

வழக்கு வினா : பதிவு செய்யப்படாத கூட்டாண்மை நிறுவனங்களின் சட்ட நடவடிக்கைகளில் கூட்டாண்மை சட்டம் பிரிவு 69-ன் தாக்கம்

 

கூட்டாண்மை சட்டம் பிரிவு 69-ல் கூட்டாண்மை நிறுவன பதிவாளர்களிடம் பதிவு செய்யபடாத கூட்டு நிறுவனங்கள் வழக்கு தொடரும் போது உள்ள விளைவுகளை பற்றி கூறுகிறது.

அப்பிரிவில் கூட்டு நிறுவனத்தின் கூட்டாளி, மேற்படி கூட்டு நிறுவனம் பதிவு செய்யப்படவில்லை எனில் அக்கூட்டு நிறுவனம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ அல்லது கூட்டாண்மை நிறுவன சட்டப் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையிலோ, மேற்படி உரிமையை நிலை நாட்ட எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது என்று சொல்கிறது. இச்சட்டப் பிரிவின் தாக்கம் குறித்து சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம்  மேற்சொன்ன SRI SAGANA Vs K. PADMAVATHI (2022 (2) MWN Page 431) என்ற வழக்கில் பிறப்பித்த தீர்ப்பில் மேற்படி இச்சட்டபிரிவின் தாக்கத்தை பற்றி தெளிவாக விளக்குகிறது.

 

மேற்படி தீர்ப்பில் கூட்டாண்மை சட்டம் பிரிவு 69-ல் உள்ள பதிவு செய்யப்படாத கூட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்யும் வழக்குகளில் உள்ள விதிவிலக்குகளை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி பதிவு செய்யப்படாத கூட்டு நிறுவனம் மூன்றாம் நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் போது, வழக்கின் கோரிக்கை 1. கூட்டு நிறுவனம் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லாமல் மூன்றாம் நபரால் ஏற்பட்டும் தொந்தரவினால் ஏற்பட்ட சிரமத்தின் அடிப்படையில் (Tort) வழக்கு தாக்கல் செய்யப்பட்டாலும், 2. கூட்டு நிறுவனம் ஏற்படுத்திகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லாமல் பொது சட்ட உரிமையை நிலைநாட்ட வழக்கு தாக்கல் செய்தாலும் கூட்டாண்மை சட்டம் பிரிவு 69-ல் உள்ள தடை மேற்படி வழக்கை பாதிக்காது என்றும் மேற்படி தடையானது கூட்டாண்மை நிறுவனம், அக்கூட்டாண்மை நிறுவன தொழில் நிமித்தமாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் (Enforcement of Rights arising out of Contract) என்றும் தெளிவுபடுத்துகிறது.

 

... T. Senthulkumar, Advocate, Erode.

Comments