Skip to main content

5. Account holder alone is Liable - வங்கி கணக்கு வைத்திருப்பவரே பொறுப்பாவார்


...P..K. Chandran, Advocate, Erode.

 

2022(1) TNLR  762

 

Arthy Vs Murugavel

 

https://indiankanoon.org/doc/197186292/

 

வழக்கின் சாராம்சம் : வழக்கு காசோலையானது தனது வாங்கி கணக்கிற்கு உண்டானது அல்ல காசோலையானது தனது கணவர் வங்கி கணக்கில் இருந்து கொடுக்கப்பட்டது எனவும் காசோலையில் இருப்பது தனது கையெழுத்து அல்ல எனவே வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் எதிரியால் வாதிடப்பட்டது.

 

உத்தரவு : அறிவிப்பை பெற்ற பிறகு எதிரி பதில் அறிவிப்பில் காசோலைக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை கணவரின் காசோலையை புகார்தாரர் எடுத்துக் கொண்டு அதில் தனது கையெழுத்தை போர்ஜ்ரி செய்து வசூலுக்கு தாக்கல் செய்துள்ளார் என கூறி இருந்தார். பிரிவு 138 இன் கீழ் திருப்பப்பட்ட காசோலையில் வாங்கிக் கணக்கை வைத்திருப்பவர் மீது தான் புகார் அளிக்க இயலும் என  உச்சநீதிமன்ற முன் தீர்ப்பை சுட்டிக்காட்டி கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு  தள்ளுபடி செய்யப்பட்டது.

 

...P.K. Chandran, Advocate, Erode.


Comments

Post a Comment