Skip to main content

3. Striking down the HMOP இந்து வாழ்வுரிமை வழக்கை ரத்து செய்தல்

  

.....Mohan Shankar, advocate, Erode

 

Indhumathi -Vs- Prithviraj

 

https://indiankanoon.org/doc/89012570/

 

வழக்கின் சங்கதி :


எதிர்மனுதாரர் குடும்ப நீதிமன்றத்தில் மனுதாரர்  மீது வாழ்வுரிமை வழக்கை தாக்கல் செய்து அது நிலுவையில் இருந்து வருகிறது. எதிர்மனுதாரர்  ஒரு அம்மன் கோவிலில் திருமணம் ஆனது என கூறி  ஒரு ரசீதை தாக்கல் செய்துள்ளார்.   மனுதாரர், எதிர்மனுதாரர் தனது பள்ளித் தோழர் எனக் கூறுகிறார். அந்த உறவைப் பயன்படுத்தி எதிர்மனுதாரர்  இருவருக்கும் திருமணம் ஆனது போல பொய்யாக மனு தாக்கல் செய்துள்ளார் ஆகவே கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் எதிர்மனுதாரர் மனுதாரர் தனது மனைவி என்றும் இந்த நீதிமன்றத்தில் இதை விசாரிக்க இயலாது எனவும், இந்த நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை, ஆவணம் தாக்கல் செய்தல் போன்றவை செய்ய இயலாது எனவும் ஆகவே கீழமை நீதிமன்றத்தில் உரிய விசாரணை நடைபபெற்று இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை உயர்நீதிமன்றம் இதில் தலையிடக்  கூடாது எனவும் எதிர்வாதம் செய்கிறார்.          

 

 

உத்தரவு : 

 

 “A.Sreedevi Vs Vicharapu Ramakrishna Gowd” 2006-1-L.W.398 மற்றும்

 

 “S.Balakrishnan Pandiyan Vs. R.Ram Prasath” 2014-5-L.W.207 ஆகிய முன் தீர்ப்புகள் பரிசீலிக்க பட்டன. 

எதிர்மனுதாரர் ஒரு திருமண புகைப் படத்தை கூட சமர்ப்பிக்கவில்லை, இந்த நவீன யுகத்தில் ஒரு செல் போன் மூலம் எடுக்கப்பட்ட படம் கூட இல்லாத திருமணத்தை நம்ப இயலாது. கோயில் நிர்வாகமும் ரசீதை மறுத்து விட்டது. இந்த திருமணம் பதிவும் செய்யப் படவில்லை.

 

உயர்நீதி மன்றம் இதுபோல வக்கீல் அலுவலகத்தில் ரகசியமாக செய்யப் படும் திருமணம், நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் செய்யும் திருமணம் போன்றவை Section 7A of Hindu Marriage Act படி செல்லத் தக்கவை அல்ல என மீண்டும் மீண்டும் சொல்லி உள்ளது. இந்த சூழலில் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு பின் தான் உண்மை தெரியும் என்கிற எதிர்மனுதாரரின் வாதம் ஏற்புடையது அல்ல. ஒரு ஆவணமும் இல்லாத வழக்கின் வெற்று விசாரணைக்கு மனுதாரர் உள்ளாக வேண்டியது இல்லை. இது போன்று ஒரு சிவில் வழக்கை தாக்கல் செய்து மனுதாரரை அவமதிப்புக்கும் அலைகழிப்புக்கும் உள்ளாகுவதே எதிர் மனுதாரரின் நோக்கம். இது போற்றத்தக்க செயல் அல்ல எனக் கூறி வாழ்வுரிமை வழக்கை.தள்ளுபடி செய்தது. 

 

...Mohan Shankar, advocate, Erode

Comments