நண்பர்களே, மின்னணு யுகத்தில் இது ஒருங்கிணைவின் காலம். ஒரு தனி மனிதனின் அறிவை விட ஒரு கூட்டுக் குழுமத்தின் அறிவுத் தொகுப்பு பெரியது, வலியது. ஒவ்வொரு துறையிலும் இன்று அறிவு பகிரப்படுகிறது, பரிமாறப்படுகிறது அதன் பயன் அனைவருக்கும் ஆனதாகிறது. ஒரு ஒருங்கமைக்கப்பட்ட குழுவின் அறிவு அதன் உறுப்பினருக்கு பெரும் சொத்து. நம்மை நவீனப்படுத்திக் கொள்ள நமது சட்டத் துறையிலும் இது போன்ற ஒரு பிரத்யேக அறிவுப் பரிமாற்ற ஊடகம் தேவையாகிறது, ஆகவே அளவை என்கிற இந்த மாதம் இருமுறை சட்ட இதழ். இது அரசியல் சார்பற்ற வழக்கறிஞர்களுக்கான காகிதமற்ற ஒரு இலவச இணைய பத்திரிக்கை. இது ஒரு வலை பூ (blogspot) வடிவில் இருக்கும். ஒரு இதழ் என்பது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெளிவரும், சுமார் 30 பக்கங்கள் கொண்டதாக இருக்கும், இது பிப் 15 2022 முதல் வெளிவரும். இதை இலவசமாக இணையம் வழி படித்துக் கொள்ளலாம். இதில் ஒரு பகுதி சட்டம் சமந்தமான அறிமுக கட்டுரைகள், தீர்ப்புகள் போன்றவை இடம்பெறும். நமக்கு வந்து சேரும் தீர்ப்புகள் அதன் எண்ணிக்கை குவியலால் கவனம் இழந்து விடுகிறது. இதைத...