நண்பர்களே, மின்னணு யுகத்தில் இது ஒருங்கிணைவின் காலம். ஒரு தனி மனிதனின் அறிவை விட ஒரு கூட்டுக் குழுமத்தின் அறிவுத் தொகுப்பு பெரியது, வலியது. ஒவ்வொரு துறையிலும் இன்று அறிவு பகிரப்படுகிறது, பரிமாறப்படுகிறது அதன் பயன் அனைவருக்கும் ஆனதாகிறது. ஒரு ஒருங்கமைக்கப்பட்ட குழுவின் அறிவு அதன் உறுப்பினருக்கு பெரும் சொத்து. நம்மை நவீனப்படுத்திக் கொள்ள நமது சட்டத் துறையிலும் இது போன்ற ஒரு பிரத்யேக அறிவுப் பரிமாற்ற ஊடகம் தேவையாகிறது, ஆகவே அளவை என்கிற இந்த மாதம் இருமுறை சட்ட இதழ். இது அரசியல் சார்பற்ற வழக்கறிஞர்களுக்கான காகிதமற்ற ஒரு இலவச இணைய பத்திரிக்கை. இது ஒரு வலை பூ (blogspot) வடிவில் இருக்கும். ஒரு இதழ் என்பது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெளிவரும், சுமார் 30 பக்கங்கள் கொண்டதாக இருக்கும், இது பிப் 15 2022 முதல் வெளிவரும். இதை இலவசமாக இணையம் வழி படித்துக் கொள்ளலாம். இதில் ஒரு பகுதி சட்டம் சமந்தமான அறிமுக கட்டுரைகள், தீர்ப்புகள் போன்றவை இடம்பெறும். நமக்கு வந்து சேரும் தீர்ப்புகள் அதன் எண்ணிக்கை குவியலால் கவனம் இழந்து விடுகிறது. இதைத...
அன்புராஜ் பேட்டி - பாகம் 1 அன்புராஜ் பேட்டி - பாகம் 2 அன்புராஜ் பேட்டி இறுதி பகுதி : உங்கள் மீதுள்ள வழக்குகள் என்னென்ன ? தமிழகத்தில் மூன்று வன ஊழியர் கடத்தல் வழக்குகள், கர்நாடகத்தில் 2 ஆள் கடத்தல் வழக்குகள். தமிழக வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் 2011இல் விடுதலையானது, கர்நாடக வழக்குகளில் 9 வனவர்கள் கடத்தப்பட்ட குண்டல் டேம் வழக்கில் ஆயுள் பெற்றேன். என்னுடன் 12 பேர் குற்றம் சாட்டப்பட்டார்கள், இன்னொரு வழக்கு விடுதலையானது. வீரப்பன் தொடர்பாக 25 ஆண்டுகளில் சுமார் 2000 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு சுமார் 50 பேர் தண்டனைக்குள்ளானார்கள். காவல்துறையின் சித்ரவதை குறித்து ? நான் மூன்று பேர்களுடன் சரண் அடைந்த உடன் நீதிமன்றத்தில் மனுச்செய்து போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கிறேன் என பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். மாதேஸ்வரன் மலையில் சிறப்பு அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள சித்திரவதை கேந்திரமான “ஒர்க் ஷாப்” என்னும் ஒரு சித்திரவதைக் கூடம் உள்ளது, சோளகர் தொட்டி நாவலில் அதை படிக்கலாம். அதற்குத்தான் அழைத்துச் செல்லப்பட்டேன். க...