Skip to main content

Posts

3. Acquiring title by gratuitous stay நல்லெண்ண வாசத்தில் உரிமை பெறுதல்

    ...V. Sampath kumar, Advocate, Erode   Maria Margarida Sequeria Fernandes & others Vs Erasmo Jack de Sequeria   2012 (3) MLJ 1202   https://indiankanoon.org/doc/100486606/   வழக்கு வினா : ஒரு சொத்தில் நல்லெண்ண அடிப்படையில் இலவசமாக தங்கி இருந்த பின் அந்த சொத்தில் உரிமை கோர முடியுமா ?   உச்ச நீதிமன்ற தீர்ப்பு : இந்த வழக்கில் உரிமையாளர் வெளிநாடு வாழ் இந்தியர். ஒரு சொத்தில் நல்லெண்ண அடிப்படையில் இலவசமாக தங்க அனுமதிக்கப் பட்டு இருந்து, அவர் பல பத்தாண்டுகள் அதில் வசித்து வந்தாலும் கூட அந்த சொத்தின் மீது எவ்வித உரிமையும் கோர முடியாது. ஒரு விடுதி பொறுப்பாளர், காவலர், பணியாளர் எவ்வளவு ஆண்டுகள் தொடர் வாசம் செய்தபோதும் அதன் மீது உரிமை கோர இயலாது. இதுபோன்ற நண்பர்கள், பொறுப்பாளர், காவலர், பணியாளர் போன்றோர ரர் நீண்ட நாள் அனுபவ உரிமை கோருகிறார்கள், இந்த கோரிக்கையை கீழமை நீதிமன்றம் பாதுகாக்கும் போக்கு உள்ளது இதை ஏற்க இயலாது.   .... V. Sampath Kumar,   Advocate, Erode

4. Admission made at police enquiry காவல்துறை விசாரணையில் ஏற்றுக் கொண்ட சங்கதி.

    ...V. Sampath Kumar, Advocate, Erode   Paneerselvam Vs Manoharan   2017 (1) CTC 18:   https://indiankanoon.org/doc/110271965/   வழக்கு வினா : ஒரு தரப்பினர் காவல்துறை விசாரணையில் எழுதிக் கொடுத்த வாக்கு மூலத்தில் ஏற்றுக் கொண்ட சங்கதிகளை பின்னர் நீதிமன்றத்தில் பயன்படுத்த முடியுமா ?   உயர்நீதிமன்ற தீர்ப்பு : வாதி நிலக்கடலை வாங்கிய வகையில் பிரதிவாதி பணம் தரவேண்டும் என ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார். அதில் இதெ பிரச்சனைக்கு முன்னர் காவல் நிலையத்தில் தான் ஒரு புகார் அளித்ததாகவும் அதில் பிரதிவாதி நிலக்கடலை வாங்கியதையும் பணம் தர வேண்டி இருப்பதையும் ஒப்புக்கொண்டு ஒரு வாக்குமூலம் கொடுத்துள்ளார் எனவும் எனவே வழக்கை தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் கோருகிறார்.   பிரதிவாதி அந்த வாக்குமூலம் தான் தன்னிச்சையாக ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்தது அல்ல எனவும் காவல் துறையினர் அழுத்தம் கொடுத்ததால் அவ்வாறு எழுத்துக் கொடுத்தேன், தான் வற்புறுத்த தப் படவில்லை என்றால் அவ்வாறு எழுத்துக் கொடுத்து இருக்க மாட்டேன் எனவும் கூறுகிறார்.   ...

5. Suppression of Accident register விபத்து பதிவேட்டை மறைத்தல்

... Krishnan, Advocate, Erode 19(2) lw cr 600. Thambiraja amson @ Thambiraja vs thisayanvilai PS, t.veli   https://indiankanoon.org/doc/92606496   வழக்கு சங்கதி : இது இதச பிரிவு 302 இன் கீழான கொலை வழக்கு ஆகும். ஒரு திருவிழா விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப் பட்டார். ஏதிரி மீது கொலை வழக்கு பதியப்படுகிறது. எதிரி கீழமை நீதிமன்றத்தில் தண்டனை பெறுகிறார். அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்.   உயர் நீதிமன்ற தீர்ப்பு : இந்த வழக்கில் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட விபத்து பதிவேட்டை போலீசார் தாக்கல் செய்யவில்லை. இறந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த நபரையும் விசாரிக்கவில்லை, இது வழக்கை பாதிக்கும் விடுபடல், இது புலன்விசாரணை அதிகாரி செய்த பெரும் பிழை. இந்த ஆவணம் மறைக்கப் பட்டதால் எதிரி விடுதலை செய்யப் படுகிறார்.   ....Krishnan, Advocate, Erode

6. சாக்கிரத்தீஸ் வழக்குரை (3)

  வழக்குரை   (3)   சாக்கிரத்தீஸ்      பிளேட்டோ சாக்கிரத்தீசின் வழக்குரை: 3 (பிளேட்டோவின் பதிவு) உண்மை இதுவே , பெரியோர்களே! சிறந்த நிலைப்பாடாகத் தனக்குத்   தென்படுவதால் அ ல்லது தனக்கு இடப்பட்ட ஆணைகளுக்குப் பணிந்து ஒரு நிலைப்பாட்டை ஒருவன் எடுத்துக்கொண்டவுடன் , மானத்துக்கு மேலாக இறப்பை அல்லது வேறெதையும் பொருட்படுத்தாமல் , அதே நிலைப்பாட்டில் நின்றுபிடித்து ஆபத்தை எதிர்கொள்ள அவன் கடமைப்பட்டவன் என்றே நான் நம்புகிறேன். எனக்கு ஆணையிட நீங்கள் தேர்ந்தெடுத்த படையதிகாரிகள் பொதிதேயா , அம்விபொலிஸ் , தீலியம் ஆகிய இடங்களில் என்னைக் களமிறக்கியபொழுது , வேறெவரையும் போலவே எனக்குரிய இடத்தில் இறப்பை எதிர்நோக்கி நான் நிலைகொண்டிருந்தேன். அதன் பிறகு என்னையும் பிறரையும் ஆராய்ந்து மெய்ஞான வாழ்வில் ஈடுபடும் கடமையில் கடவுள் என்னை அமர்த்தியதாக நான் நினைக்கிறேன் , நம்புகிறேன். ஆதலால் , பெரியோர்களே , இவ்விரு சூழ்நிலைகளிலும் நான் இறப்பையோ வேறெந்த ஆபத்தையோ எதிர்நோக்க அஞ்சி நிலைபிறழ்ந்திருந்தால் , எனக்கிட்ட பணியை நான் உதறித்தள்ளியிருந்தால் , நான் படுமோசமான முறையில் முன்பின்முரணாக நடந்த...