1959 ஆண்டு ஈரோட்டில் கொர்நெலியஸ் ஆலிஸ் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் திருமதி பார்பரா லிடியா. ஈரோடு வேளாளர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் முடித்து 1983 இல் கோவை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்தார். அதன் பின் 1998 வரை மூத்த வழக்கறிஞர் திரு. ஏ சி முத்துசாமியிடம் இளநிலை வழக்கறிஞராக இருந்து தற்போது ஈரோட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள். சுமார் 40 ஆண்டுகள் தொழில் அனுபவம் கொண்ட அவரை ஈரோட்டில் அவர் அலுவலகத்தில் சந்தித்து செய்த நேர்காணல் இது. ....A.S. Krishnan, advocate, Erode. 1. இந்த வழக்கறிஞர் தொழிலை ஆண்கள் செய்வதற்கும் பெண்கள் செய்வதற்கும் என்ன வேறுபாடு ? இந்த தொழில் இப்போதும் ஆண் மைய (male oriented) தொழில் தான், பெரும் பகுதியினர் ஆண்கள். ஒரு மூத்த வழக்கறிஞரிடம் பணியாற்றும் போது இளநிலை வழக்கறிஞர்களில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வாய்ப்பு பெறுவது இல்லை. இதற்கு ஆண்களால் சுதந்திரமாக பல இடங்களுக்கு சென்று வர இயலும், இரவு நேரம் வரை அலுவலில் இருக்க இயலும் போன்ற காரணிகள் உண்டு. ஆக ஒப்புநோக்க பெண்கள் தொழிலாற்றுவது சற்று கட