Skip to main content

3. Witness without summons - அழைப்பாணை இன்றி சாட்சி விசாரணை

  

.... Advocate Mohan Shankar, Erode.

 

Vidhyadhar vs Manikrao & Anr.

Citation:  AIR 1999 SC 1441

 

https://indiankanoon.org/doc/1332419/

 

வழக்கின் வினா : 

அழைப்பாணை இன்றி வந்த சாட்சியின் சாட்சியம் நம்பத் தகுந்ததா 

 

சங்கதி : இந்த வழக்கில் வாதி இரண்டாம் பிரதிவாதியை ஒரு சாட்சியாக விசாரித்தார். அவர் வாதிக்கு ஒரு கிரயம் எழுதிக் கொடுத்ததையும் கிரையத் தொகை பெற்றதையும் ஒப்புக் கொண்டார், இந்த சாட்சியதின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுகிறது.

 

தீர்ப்பு: இரண்டாம் பிரதிவாதியை வாதி தனது சாட்சிப் பட்டியலில் காண்பிக்கவில்லை, அவருக்கு அழைப்பாணை அனுப்பவில்லை. மேலும் இவரை சாட்சியாக விசாரிக்க உரிய மனுவும் செய்யவில்லை. இதை சுட்டிக் காட்டி உயர்நீதிமன்றம் இவரின் சாட்சியம் குறித்து எதிர்மறையான முடிவை எடுத்தது.  

 

உச்ச நீதிமன்றம் இந்த உயர்நீதிமன்ற கருத்து தவறு எனக் கூறியது. உரிமையியல் நடைமுறை சட்டம் பிரிவு 16 சாட்சிக்கு அழைப்பாணை பற்றி கூறுகிறது. அதன் விதி 1 சாட்சி பட்டியல் பற்றி கூறுகிறது, விதி 1 A அழைப்பாணை இன்றி சாட்சியை அழைப்பது பற்றியது. அதன் துனைவிதி 3 என்பது மேலே சொன்ன விதி 1ஐ தவிர்த்து சாட்சிப் பட்டியலில் பெயர் இன்றி அழைப்பாணை அனுப்பாமல் நேரடியாக சாட்சியை விசாரித்து ஆவணங்களை சமர்பிக்கலாம் என கூறுகிறது. இந்த இரண்டு விதிகளும் ஒரு தரப்பு சுதந்திரமாக தனது சாட்சியை வரவழைத்து விசாரித்து ஆவணங்களை வழங்க அனுமதிக்கிறது. 1976 CPC பிரிவு 1 A சட்டத் திருத்தத்தின் படி இது சந்தேகமின்றி தெளிவாகிவிட்டது. விதி 1  துணை விதி 3 படி இப்படி ஒரு சாட்சியை கொண்டு வந்தால் அதிகபட்சம் நீதிமன்ற ஒப்புதல் தேவை எனலாம் அவ்வளவே,  இதனாலேயே இந்த சாட்சியின் நம்பகத் தன்மை பாதிக்காது என தீர்ப்பளித்தது. 

.......

Comments