Skip to main content

5. Complaint by public servant concerned - சம்பந்தப்பட்ட பொது ஊழியரின் புகார்


..... P.K. Chandran, advocate, Erode.

 

Karthi & ors vs state rep by bathalagundu ps

 

2022(1) MWN cr 246.

 

 

சட்ட பிரிவுகள் : 

 

290, 291,186,188 r/w 192-A, 152,290,291 Ipc

 

 

வழக்கு சங்கதி:  எதிரிகள்  பொது இடத்தில்  விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் ஒரு ட்ராக்டர் மீது விநாயகர் சிலையை வைத்து, அதில் மற்ற எதிரிகளை பயணிக்க வைத்தும், ஒலிபெருக்கி மூலம் சத்தத்துடன் பாடல்களை  ஒலிபரப்பியும்  இடையூறு செய்துள்ளார்கள். காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டு உள்ளார்கள். முறையான ஆவணம் எதுவும்  இல்லாமல், அனுமதி பெறாமல்  டிராக்டர் இயக்கப்பட்டு உள்ளது. இதனால் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் எதிரிகள்  மீது 290, 291,186,188 உடன் இணைந்த 192-A, 152,290,291 இத ச பிரிவுகளின் கீழ் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

 

தீர்ப்பு : குவிமுச பிரிவு  195 இந்த படி சம்பந்தப்பட்ட பொது ஊழியர் தான் இ த ச 172 முதல் 182  வரையில் ஆன குற்றங்களுக்கு புகார் கொடுக்க தகுதியானவர், இதில் புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலர் என்பவர் சம்பத்தப் பட்ட பொது ஊழியர் அல்ல.  இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பொது ஊழியர் புகார் எதுவும் கொடுக்காத படியால்  இந்த  இ த ச பிரிவு 186,188  கீழ் நிலைக்கத் தக்கது அல்ல என  தீர்ப்பளிக்கப்பட்டது. 

 

   அடுத்தபடியாக இ த ச பிரிவு 290 கீழான குற்றமானது அனுமதியின்றி ஏற்கத்தக்க (non cognizable ) குற்றம் அல்ல.  குவிமுச  185  படி இது போன்ற வழக்கை நீதிமன்ற அனுமதி பெற்றுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.  அவ்வாறு  அனுமதி பெறாமல் பிரிவு 290  இ த ச கீழான வழக்கு பதிவு செய்யப் பட்டத்தால் இவ்வழக்கு  தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும்  காவல்துறை அல்லது வருவாய்த்துறை  தடை உத்தரவு குறித்து எவ்வித ஆவணங்களும் தாக்கல் செய்யவில்லை. இந்த  காரணத்தால் இ த ச பிரிவு 291  கீழான குற்றசாட்டு நிலைக்கத் தக்கது அல்ல என்று தள்ளுபடி செய்யப்பட்டது.    

 

... P.K. Chandran, advocate, Erode.

Comments