Skip to main content

6. Not Showing cheque number - காசோலை எண் குறிப்பிடப்படவில்லை

 

....P.K. Chandran, advocate, Erode.


2021 (1) MWN (Crl) DCC 72

Sai Infra Equipments Private Ltd.,   Vs     L & W Constructions Private Ltd.,

https://indiankanoon.org/doc/21967330/

 

சட்டம் :   Sec 138 (b) N.I. Act

 

வழக்கின் சாரம்சம்:  காசோலை திருப்பப்பட்ட பிறகு Sec 138 (b) N.I. Act -ன் கீழாக அனுப்பிய அறிவிப்பில் புகார்தாரர் காசோலை எண்ணிற்கு பதிலாக வங்கி கணக்கு எண்ணை குறிப்பிடப்பட்டு இருந்தார். ஆகையால் வழக்கினை விசாரணை இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும் (Quash) என கோரி எதிரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்கிறார்.

 

நீதிமன்ற தீர்ப்பு:  அறிவிப்பில் காசோலை எண் மாற்றிக் கூறப்படவில்லை. எதிரியின் வங்கி கணக்கு எண் காசோலை எண்ணாக கூறப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பில் காசோலை எண் குறிப்பிடப்பட வேண்டிய அவசியமில்லை. புகாரில் காசோலை எண், வங்கிக் கணக்கு எண் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

1. Nalini Mohanan Vs. State of Kerala reported in 2020 SCC Online Ker 6000,     

 

  2. Nazir Ahmad Baba Vs. Nazir Ahmad Dar reported in 2018 SCC Online J&K 70, 

 

ஆகிய முன்தீர்ப்புகளில் அறிவிப்பில் காசோலை எண் தவறுதலாக  குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அது வழக்கினை எவ்வித்திலும் பாதிக்காது என்று கூறியுள்ளதை கருத்தில் கொண்டு, இந்த வழக்கில் அனுப்பட்டுள்ள அறிவிப்பு குறைபாடானது எனக்கூற முடியாது எனக்கூறி எதிரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


Comments

  1. சிறு பிழைகள் தும்மல்களைப்போல. நடைமுறையில் தவிர்க்க முடியாதவை.

    பிழைகள் சட்டம் அல்லது உண்மையின் போக்கை மாற்றாத வரை அவற்றைப் புரிதலுடன் ஏற்று எதிர்த்தரப்பு பிரச்னையின் மையத்தை அல்லவா அணுகவேண்டும்? சிறு பிழைகளை நீதிபதி முன்பாக சரிசெய்து கொண்டு மேலே செல்ல வேண்டும். இல்லாவிட்டால் எதிர்த் தரப்புக்கு கிடைக்கும் பரிசு தாமதம் ஏற்படுத்தி விட்டது தவிர வேறில்லை.

    ReplyDelete

Post a Comment