Skip to main content

3. When the parties to execution petition dies - நிறைவேற்று மனுவில் தரப்பினர் இறக்கும் போது

 

....Mohan Shankar, Advocate, Erode.

 

V. Uthirapathi Vs. Ashrab Ali and Ors.

 

 Citation: AIR 1998 SC 1168


https://indiankanoon.org/doc/1243915/

 

 

வழக்கு வினா : உரிமையியல் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் ஒரு வழக்கமான நிறைவேற்று மனு நிலுவையில் உள்ள போது வென்ற தரப்பினரோ அல்லது தோற்ற கடன்தாராரோ இறந்துவிடுகிறார். இந்த சூழலில் 90 நாட்களுக்குள் இறந்தவரின் வாரிசுகளை சேர்க்க மனு செய்யவில்லை என்றால் இந்த நிறைவேற்று மனுவை தள்ளுபடி செய்யலாமா ?  

 

 

உச்சநீதிமன்ற தீர்ப்பு :  Order 22 Rule 12, Nothing in Rules 3, 4 and 8 என்கிற பிரிவுகள் தீர்ப்புக்கு முன் ஏற்படும் நிகழ்வுகளை பொறுத்து பொருந்தும், ஆனால் நிறைவேற்று மனுவில் உள்ள நடைமுறைகளுக்கு இது பொருந்தாது.  விதி 12  தீர்ப்பு பெற்ற நபருக்கு சாதகமானது, தீர்ப்பு பெற்றவர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகள் தன்னை பதிலியாக சேர்க்குமாறு விதி  2 இன்  கீழ் மனு செய்ய வேண்டியது இல்லை. அந்த மனுவை அந்த வாரிசுகளே தொடரலாம் அல்லது புதிய ஒரு நிறைவேற்று மனுவை தாக்கல் செய்யலாம்.  ஆக நிறைவேற்று மனு நிலுவையில் உள்ளபோது தீர்ப்பு பெற்றவரே அல்லது தீர்ப்பு கடனாளியோ இறந்த நிலையில் சம்பந்தப்பட்ட வாரிசுகள் இணைக்கப் படவில்லை என்ற காரணத்துக்காக  அம்மானு தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.   இதற்கு கால வரம்பே இல்லை, இந்த நிறைவேற்று மனு எல்லையற்று நிலுவையில் வைக்கப் படவேண்டும், தீர்ப்பு பெற்றவரின் வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் மனுவை தொடரலாம். நடவடிக்கை தவறியதாக இந்த மனுவை தள்ளுபடி செய்ய இயலாது   

 

ஆனால் தீர்ப்புக் கடனாளி இறந்துவிட்டால் நீதிமன்றம் போதுமான காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், அதற்குள் தீர்ப்பு பெற்றவர் இறந்தவரின் வாரிசுகளை இணைக்க மனு செய்யவில்லை என்றால் நிறைவேற்று மனுவை தள்ளுபடி செய்யலாம். அவ்வாறு தீர்ப்பு பெற்றவர் இறந்த தீர்ப்பு கடனாளியின் வாரிசுகளை இணைக்க மனு செய்யும் பட்சத்தில் அல்லது புதிதாக ஒரு நிறைவேற்று மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் அது ஏற்கனவே நிலுவையில் உள்ள நிறைவேற்று மனுவின் தொடர்ச்சியாக தான் கருதப்பட வேண்டும். எந்த சூழலிலும்  ஒரு தரப்பினர் இறந்ததாக கூறி தானாக ஒரு நிறைவேற்று மனுவை தள்ளுபடி செய்ய  இயலாது 

 

 

.... Mohan Shankar, Advocate, Erode.

Comments