Skip to main content

5. Territorial jurisdiction in private complaint - தனிப் புகாரின் நிலவியல் வரம்பு

 

.....Advocate  V .S . Senthil kumar , Chennai 

 

Mani  Vs  Velkumar , Madras High Court 

https://www.mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/732279

 

சட்ட பிரிவுகள் : 200  கு வி மு  

 

வழக்கின் வினா : ஒரு குற்ற வழக்கை தனி நபர் தாக்கல் செய்யும் போது  (Private complaint U/S 2oo Cr.P.C) அவ்வழக்கில் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த நீதிமன்றத்தின் நிலவியல் அதிகார வரம்புக்குள் வாசித்தல்.

 

வழக்கின் சாராம்சம்  : புகார்தாரர் தூத்துக்குடியில்  குற்றம் சாட்டப்  பட்டவர் மீது ஒரு அவதூறு வழக்கை ஒரு  தனிப் புகார் வழியாக தாக்கல் செய்கிறார், குற்றம் சாட்டப்ப பட்டவர் தூத்துக்குடிக்கு வெளியே வசிக்கிறார்.    

 

தீர்ப்பு : குற்றம் சாட்டப் பட்ட  நபர் தனது நீதிமன்ற அதிகார வரம்புக்கு வெளியே வசிப்பவர் என்றால், அவர்மீது  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு  அழைப்பாணை அனுப்புவதற்கு போதுமான அளவிற்கு நியப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அந்த நீதிமன்றம்  சிறப்பு விசாரணை நடத்திவ அடிப்படை முகாந்திரம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்  அவ்வாறு விசாரணை செய்யாமல் வழக்கு கோப்பிற்கு எடுக்கப்பட்டால் அது செல்லத்தக்கதல்ல. வேறு இடங்களில் வழக்கு தாக்கல் செய்து, குற்றம் சாட்டப்பட்டோரை அலைக்கழிக்கும் எண்ணத்தோடும், அதன் மூலம் தவறான முறையில் தான் நினைப்பதை அடைய நினைப்பவர்கள் தாக்கல் செய்யும் பொய்யான வழக்குகளை தடுப்பதற்காக இந்த சட்ட திருத்தம்  

 (23.06.2006)  கொண்டுவரப்பட்டுள்ளது. 

 

காவல் துறை தாக்கல் செய்யும் வழக்கிற்கும், மாற்றுமுறை ஆவண சட்டம் 138ன் (138 N.I Act) கீழ் தாக்கல் செய்யப்படும் காசோலை வழக்குகளுக்கும் இது பொருந்தாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

 

மேலதிக வாசிப்புக்கு :  https://indiankanoon.org/doc/76640826/

Comments