... Advocate Mohan Shankar, Erode.
Chellam & others Vs N.Srinivasan and others
Citation: 2022 (1) CTC 852
வழக்கு வினா : குடும்ப உறவில் ஏற்பட்ட சொத்து வழக்கு குடும்ப நல
நீதிமன்ற சட்டம் பிரிவு 7 இன் வரம்புக்குள் வருமா ?
சங்கதி: கணவர் விவாகரத்து வேண்டி மனைவி மீது குடும்ப நல நீதிமன்றத்தில்
ஒரு வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இதன் பிறகு உரிமையியல் நீதிமன்றத்தில் மனைவி குடும்ப சொத்துகளை
பொறுத்து உறுத்துக்கட்டளை
உத்தரவு வேண்டி கணவர், கொழுந்தனார் மற்றும் மாமியார் மீது ஒரு வழக்கு தாக்கல்
செய்கிறார். இதன் பின் கொழுந்தர் மேற்சொன்ன தன் சகோதரர் மனைவி மீது இது போல வேறு ஒரு உரிமையியல் வழக்கு தாக்கல்
செய்கிறார். இந்த வழக்கு தொடுத்த
மனைவியின் மாமனாருக்கு சொந்தமான சொத்து என்பது இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இந்த இரண்டு
வழக்குகளையும் விவாகரத்து வழக்கை விசாரிக்கும் குடும்பநல நீதிமன்றம் ஏற்கனவே உள்ள
விவாகரத்து வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் அதற்காக இந்த இரண்டு வழக்குகளையும் குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் மனைவி
உயர்நீதிமன்றத்தில் பிரிவு 24 உரிமையியல் நடைமுறை சட்டத்தின் கீழ் ஒரு மனுவை தாக்கல்
செய்கிறார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்வருமாறு : பிரிவு 7 உட்பிரிவு (c
), (d ) குடும்ப நல நீதிமன்ற சட்டத்தின் படி கொழுந்தன் , மாமியார் ஆகிய உறவுகள் "குடும்ப உறவு" என்கிற வரம்புக்குள் அமையாது, மனைவி இந்த சொத்துக்களில் தனி உரிமை
எதுவும் கோரவில்லை, இந்த குடும்ப நல சட்டம் உருவாக்கப் பட்டத்தின் நோக்கம் குடும்ப உறவுகளுக்குள் உள்ள
சொத்துக்களை பொறுத்தது ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கத் தானே ஒழிய அதற்கு அப்பாற்பட்ட சொத்துப்
பிரச்சனைகளை தீர்க்க அல்ல. மேலும்
பிரிவு 24 உரிமையியல் நடைமுறை சட்டத்தை ஒரு சிறப்பு சட்டத்தால் ஏற்படுத்தப் பட்ட சிறப்பு நீதிமன்றத்தின்
வழக்குகளுடன் சேர்த்தது விசாரிக்கும் வகையில் மாற்றம் செய்ய இயலாது என கூறியது, ஆகவே அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
.......
Learn to know
ReplyDelete