மருதமுத்து நாகரத்தினம் தம்பதிக்கு மகளாகப் பிறந்த செல்வராணி திருச்சிராப்பள்ளி சட்டக் கல்லூரியில் 2005 ஆண்டு சட்டம் முடித்து குற்றவியல் வழக்கறிஞர் திரு.ஜேசு பால்ராஜ் இடம் 5 ஆண்டுகள் இளநிலை வழக்கறிஞர் ஆக பணியாற்றினார். தற்போது திருச்சியில் வழக்கறிஞர் தொழில் புரிகிறார், அங்கு தாயாருடன் வசித்து வருகிறார். வாசிப்பார்வமும் தீவிர பயண ஈடுபாடும் கொண்டவர், தொடர் பயணங்களில் இருப்பவர். நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த பயணம் முடிந்து அவர் ஊர் திரும்பும் போது நாமக்கல்லில் நண்பர்களுடன் அவரை சந்தித்து நான் எடுத்த பேட்டி இது. ..... கிருஷ்ணன், வழக்கறிஞர், ஈரோடு. நன்றி : https://www.jeyamohan.in/109537/ செல்வராணி 38 வயது, தனி நபர், திருச்சியில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். ஒரு மாதத்திற்கு முன் திருச்சியில் இருந்து ஒரு வெஸ்பாவில் கிளம்பி மணாலி வரை சென்றார், 30 நாட்களுக்கு பிறகு திருச்சி திருப்பும் வழியில் 24-5-2018 மாலை பத்து நண்பர்களுடன் நாமக்கல்லில் சந்தித்து அவருடன் உரையாடினோம். பொருத்தமாக சுபாஷ் சிலையின் முன்பு ஒரு படமும் எடுத்துக்கொண்டோம். அறிந்த நபர்களை முழுவதும் நா...