1967 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பவானியில் சண்முகம் நாகரத்தினம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பாலமுருகன். 1993 ஆம் ஆண்டு கோவையில் சட்டப்படிப்பு முடித்தார். பின் 6 ஆண்டுகள் மூத்த வழக்கறிஞர் ப பா மோகன் அவர்களிடம் இளநிலை வழக்கறிஞர் ஆக இருந்தார். மாணவ பருவத்தில் AISF இல் இருந்துள்ளார். தற்போது மக்கள் சிவில் உரிமை கழகத்தில் (PUCL) தேசிய செயலர், பழங்குடிகளுக்காக செயல்பட்டவர், இடதுசாரி சிந்னையாளர். "சோளகர் தொட்டி" என்கிற இவரது நாவல் குறிப்பிடத்தக்கது. இரண்டு மகன்கள் மனைவியுடன் கோவையில் வாழ்ந்து வருகிறார். கோவையில் அவரது அலுவலகத்தில் சந்தித்து செய்த நேர்காணல் இது. ----- Krishnan, advocate, Erode. வழக்கறிஞர் தொழில் : 1. முதல் 3 ஆண்டுகள் உங்கள் தொழில்முறை இவ்வாறு இருந்தது, உங்கள் திறனை மேம்படுத்த என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள் ? ஐந்து ஆண்டுகள் ப பா மோகன் இடம் பணியாற்றிய போது வகை வகையான வழக்குகளை பார்த்துள்ளேன். எனக்கு அது நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஒரு வழக்கறிஞர் தன் கட்சிக்காரருக்கு உண்மையாக இருக்க வேண்டும், உங்களுக்...