ஈரோடு சின்னியம் பாளையத்தில் 1969 ஆம் ஆண்டு துளசிமணி செல்லம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த T. செந்தில் குமார், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் படிப்பும் , பெங்களூரு BMS சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பும் முடித்து 1992 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஆனார். 13 ஆண்டுகள் மறைந்த திரு சுந்தரம் அவர்களிடம் இளநிலை வழக்கறிஞர் ஆக பணியாற்றி தற்போது ஈரோட்டில் மனைவி 2 மகன்களுடன் வாழ்ந்து வருகிறார் . இவர் தலைமுறை வழக்கறிஞரிடையே குறிப்பிடத் தக்கவர், உரிமையியல் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரை ஈரோட்டில் அவர் அலுவலகத்தில் செய்த நேர்காணல் இது. ....A.S. Krishnan, Advocate, Erode ................... 1. முதல் 3 ஆண்டுகள் உங்கள் தொழில்முறை இவ்வாறு இருந்தது, உங்கள் திறனை மேம்படுத்த என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள் ? நான் இளநிலை வழக்கறிஞராக சேர இரண்டு வாய்ப்புகள் இருந்தது. ஒன்று திரு A.C. முத்துசாமி அலுவலகம், ...