Skip to main content

Posts

2. Stranger to a sale deed can challenge - கிரைய ஆவணத்துக்கு சம்பந்தமற்ற நபர் அதை எதிர்க்கலாம்

  --- V.Sampathkumar, Advocate, Erode     Vidhyadhar Vs Manickrao and another reported in CDJ 1999 SC 1017=1999 3 SCC 573.      https://indiankanoon.org/doc/1332419/   சட்டப்பிரிவு : சொத்து மாற்றச் சட்டம் பிரிவு 17     சம்பந்தமற்றவர்   ஒரு   கிரைய ஆவணத்தின் போதாமையோ   அல்லது மறுபயன் குறைவு என்றோ எதிர்க்க இயலாது. ஆனால் ஒரு அசல் நோக்கத்துக்காக எழுதப்பட்ட   கிரைய பத்திரத்துக்கும்   தீய எண்ணத்துடன்   எழுதப்பட்ட   கிரைய பத்திரத்துக்ககும்   வேறுபாடு உண்டு. ஒரு கிரைய பத்திரம்   உரிமை மாற்றம் செய்யும் நோக்கம் அற்று பாசாங்காக எழுதப் படுமானால் ஒரு மூன்றாம் நபர் கூட அதன் செல்லும் தன்மை குறித்து வழக்கு தாக்கல் செய்யலாம்.     நீதிமன்ற தீர்ப்பு :   உதாரணமாக ஒரு நில உரிமையாளருக்கு பல நிலங்கள் உள்ளது, தனது ஒரு நிலத்தின் குத்தகை தாரரை   வெளியேற்ற அவருக்கு நியாமான காரணம் இல்லை. இந்த நிலையில் பாசாங்காக பெயரளவில் மட்டும் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பது போல ஒரு கிரை...

3. Registration of court decree - நீதிமன்ற சொத்து தீர்ப்பை பதிவு செய்தல்

  ---V.Sampathkumar, Advocate, Erode     Mani @ Devaraju and others Vs       District Registrar, Administration, Dharmapuri,   Reported in       CDJ 2021 MHC 3204.   சட்டப்பிரிவு : பதிவு சட்டம் பிரிவு 17(1),23   நீதிமன்ற சொத்து தீர்ப்பை   கட்டாயம்   பதிவு செய்ய வேண்டுமா, அதற்கு கால வரம்பு உள்ளதா என்கிற கேள்வி மேற்படி வழக்கில் எழுந்தது.       உயர்நீதிமன்ற தீர்ப்பு : இது குறித்து   ஏராளமான ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது எனவே இந்த பொது உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பதிவு சட்டம் பிரிவு 17(1) படி ஒரு நீதிமன்ற சொத்து தீர்ப்பை கட்டாயம்   பதிவு செய்ய வேண்டியது இல்லை. காலவரம்பு பற்றி பேசும் இதே சட்ட பிரிவு 23 இந்த நீதிமன்ற தீர்ப்புக்கு பொருந்தாது. எனவே அணைத்து   மாவட்ட பதிவாளர்களும்   இனிமேல் நீதிமன்ற சொத்து தீர்ப்புகளை   காலவரம்பின்றி பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.        -----V. Sampathkumar, Advocate, Erode

4. Returning the Charge Sheet - குற்றப் பத்திரிக்கையை திரும்ப அளித்தல்

  ... M.V. Chandrasekaran, Advocate, Erode   Nisha. I. vs. State of Tamil Nadu,rep. by the Additional Chief Secretary   to   Govt., Home,Prohibition   and Excise Department, Chennai,(DB). 2022(1) MWN(Cr). 628.   https://indiankanoon.org/doc/65982746/   சட்டப்பிரிவு :   Rule 25 of the Criminal Rules of Practice, 2019.   வழக்கு   சங்கதி : இது ஒரு ஆட்கொணர்வு மனு ஆகும். மனுதாரரின் தந்தையை   குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்துவிட்டனர்.   அரசு குண்டர் தடுப்பு சட்டத்தில் கூறப் பட்டுள்ள நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை எனவே தனது   தந்தையை விடுவிக்க வேண்டும் என மனுதார்   கோருகிறார்.   உயர்நீதிமன்ற தீர்ப்பு :   இவ்வழக்கில் குண்டர் சட்டத்தில் கூறியுள்ளபடி 90 நாட்களுக்குள் போலீசார் குற்றப் பத்திரிக்கையை   தாக்கல் செய்யவில்லை. கோப்பை பார்வையிட்டபோது மிக தாமதமாக இது தாக்கல்    செய்யப் பட்டது   தெரிகிறது. நீதித்துறை நடுவர் இதை   திருப்பி இருக்கிறார். இவ்விடத்தில் இதேபோல ...

5. Joint account holder not liable - கூட்டு கணக்காளருக்கு கடப்பாடு இல்லை

  ---A.S. Krishnan, Advocate, Erode. Mrs. Aparna A. Shah Vs M/s Sheth Developers Pvt. Ltd. & Anr. https://indiankanoon.org/doc/162382342/   சட்டப் பிரிவு : மாற்றுமுறை ஆவண  சட்டம் பிரிவு 138.     வழக்கு சங்கதி:  நில விரிவாக்கம் சம்பந்தமாக கணவர் தானும் தன்  மனைவியும்  கூட்டாக தொடங்கி  உள்ள வங்கிக் கணக்கில் இருந்து தான் மட்டும் கையெழுத்து செய்து ரூபாய் 25 கோடிக்கு ஒரு காசோலையை ஒரு நிறுவனத்துக்கு வழங்குகிறார்கள். அந்த நிறுவனம் காசோலையை வசூலுக்கு தாக்கல் செய்தபோது அது போதிய பணம் இல்லை என திருப்பப் பட்டது. அதனால் அந்த நிறுவனம் கணவர் மனைவி இருவர் மீதும் மாற்றுமுறை ஆவண  சட்டத்தின் கீழ்  வழக்கு தொடுத்தது. ஒரு இடைக்கால மனுவின் விசாரணையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றத்தில் மனைவி இந்த வழக்கை விசாரணைக்கு முன்பே  தள்ளுபடி செய்யக் கோரினார்.     உச்சநீதிமன்ற தீர்ப்பு:   இந்த காசோலையை பார்வையிட்ட போது இதில் இருவர் பெயரும் அச்சிடப்பட்டு உள்ளது, ஆன...

6. மார்ட்டின் லூதர் கிங் - நான் காணும் கனவு

  மார்ட்டின் லூதர் கிங் நான் காணும் கனவு 1963 -08-28 இன்று இப்பேரணியில் உங்களுடன் பங்குபற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். எமது நாட்டு வரலாற்றில் இது மிகப்பெரும் சுதந்திரப் பேரணி என்று பொறிக்கப்படப் போகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஒரு மகத்தான அமெரிக்கர் எமது விடுதலைப் பிரகடனத்தில் ஒப்பமிட்டார். ஒரு சின்னமாய் விளங்கும் அவரது நிழலில் இன்று நாம் எழுந்து நிற்கின்றோம். அநீதியின் தீக்கொழுந்துகளில் கருகிப்   பொசுங்கிய கோடிக்கணக்கான கருப்பின அடிமைகளுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக வெளிவந்த ஆணை அது. அடிமை இருளை விலக்கும் இன்ப விடிவாக வெளிவந்த ஆணை அது. ஆனால் இன்று நூறாண்டுகள் கழிந்த பின்னரும் கூட ,   கருப்பின மக்கள் சுதந்திரம் துய்க்கவில்லை. நூறாண்டுகள் கழிந்த பின்னரும் கூட ,   இன ஒதுக்கல் எனும் கைவிலங்கும் ,   பாகுபாடு எனும் கால்விலங்கும் இடப்பட்டு ,    கருப்பின மக்களின் வாழ்வு முடக்கப்பட்டுள்ளமை வருத்தம் தருகிறது. நூறாண்டுகள் கழிந்த பின்னரும் கூட ,   கருப்பின மக்கள் மாபெரும் செல்வக்கடல் சூழ்ந்த வறுமை எனும் தனித்தீவில் வாழ்ந்து வரு...